CCM Tamil Bible Study - ஆண்டவர் வெறுக்கிறவைகள்
- Get link
- X
- Other Apps
வெளி2:15b. நிக்கோலாய் மதஸ்தரை பின்பற்றுகிறவர்களை நான் வெறுக்கிறேன். உபா16:22;சங்5:5;11:5;நீதி6:16;ஏசா1:14;61:8;எரே12:8;ஆமோ5:21;மல்2:16;வெளி2:6.
ஆண்டவர் வெறுக்கிறவைகள்
மேலே சொல்லப்பட்டுள்ள வாக்கியங்களெல்லாம் ஆண்டவர் வெறுக்கிறவைகள் குறித்து பட்டியலிடுகின்றது. ஆண்டவர் எதை வெறுக்கிறாரோ, எதனை வெறுக்கிறாரோ அதை அவர்களை நாம் வெறுக்காதிருந்தால் நாமும் அவரால் வெறுக்கப்படதக்கவர்களாவோம். அவருடைய அன்புக்குரியவர்களையும், நேசத்துக்குரியவர்களையும் அவர் வெறுத்து ஒதுக்குவதில்லை என்று கூறுவோமென்றால் அவர்கள் அவரின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் வழியில் நடக்க வேண்டும். ஆண்டவர் அவரின் மனதுக்கு பிரியமான எருசலேமையே – சீயோன் மலையையே வெறுத்து ஒதுக்கியதை மறவாதிருக்க வேண்டும். ஆண்டவரின் வெறுப்புக்குள்ளான ஒருவரின் காணிக்கையை வாங்குகின்ற ஆண்டவரின் அன்புக்குரியவர்கள் கூட அவரின் கோபத்திற்கு ஆளாகி படுகுழியில் அகப்படுவர் என்பதை மறவாதிருப்போமாக.
ஆண்டவர் அன்புள்ளவர்தான். அவர் தம் ஜீவனை கொடுத்ததும் உண்மைதான். ஜீவனைக் கொடுத்தவரே ஜீவனை எடுக்கமாட்டார் என்பதும் உண்மைதான். ஆனால் அவரது குமாரர்களும் குமாரத்திகளும் அவர் வெறுக்கும்படியாக நடந்துக்கொள்ளாதிருப்பதில்தான் உள்ளது. அன்பையும், கிருபையையும் தலைமேல் தூக்கி சுமந்துக்கொண்டு கீழ்படிதலின் பாதையில் நடவாதிருந்தால் கிருபையும் அன்பும் எடுக்கப்பட்டுப்போகும் என்பதை நினைவிற்கொள்வோமாக. சமாதானத்தை கொடுத்தவரே அதை எடுத்துப்போடுவார் என்று வெளிபடுத்தல் கூறியிருக்க அன்பையும் கிருபையையும் கொடுத்தவரே அதை எடுத்துப்போடுவார் என்பதும் உறுதியாகும்.
இஸ்ரயேலர் வெறுக்கப்பட்டதினால்தான் சிறையிருப்புக்குள் தள்ளப்பட்டார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து மனந்திரும்பியபோதுதான் அவரின் உள்ளம் மாறுதலடைந்து அவர்களை சிறையிருப்பிலிருந்து திருப்பிக்கொண்டு வந்தார். தன்னுடைய சேஷ்டபுத்திரனாகிய இஸ்ரயேலரையே வெறுத்து ஒதுக்கினாரென்றால் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளாகிய நாம் நமது ஆவிகளின் பிதாவுக்கு எவ்வளவு அஞ்சி நடக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்வோம். இரு பிள்ளைகளுக்கும் ஒரே நியமம்தான். கீழ்படிகிறவன் யாராயிருந்தாலும் அவன் மட்டுமே அன்புக்குரியவனாவான்.
கிருபையால் மீட்கப்பட்டோம். கீழ்படிதலினால் நிலைநிற்கிறோம் என்பதை மறவாதீர். கீழ்படிதலை தொலைத்துவிட்டு கிருபையில் தொங்கி உல்லாசம் அனுபவிக்கின்றவர்கள் அவரால் வெறுப்பப்படதக்கவர்களாவர். அருவருப்பானதை சுமந்துக்கொண்டு அன்புக்கும், நேசத்துக்கும், கிருபைக்கும் ஏங்க முடியாது. அருவருப்பானவைகளை விட்டுவிட்டாலொழிய மரியாளைப்போல நல்ல பங்ககைப் பெறமுடியாது.
வெறுக்கும் ஆண்டவரை சாந்திபண்ண கீழ்படிதலின் பாதையில் தீவிரபடு. ஆண்டவரின் வெறுப்பின் வெளிப்பாடுதான் வெளிபடுத்தலில் உள்ள கடைசி கால நிகழ்வுகள். இதை உணர்ந்து அவரின் அன்புக்குரியவர்களாவோம்.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக்கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! ரோமர் 11:29-33…
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment