Posts

Showing posts from March, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - நீ காத்துக் கொண்டபடியால்

நீ காத்துக் கொண்டபடியால் வெளி 3:10a. என் பொறுமையை குறித்து சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியால்…. வெளி 1:9;13:10;14:12;லூக்கா 8:15;9:41;21:19;ரோமர் 2:4;3:25;15:4,6.  பொறுமை என்றால் நோக்கத்தில் தளர்வு இல்லாத, ஒரே சீரான தன்மை, துன்ப தாங்கும் மனத்தண்மை, பாரம் தாங்குதல், விடா முயற்சி என்று பொருள் கொள்ளப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் 32 தடவைகள் வந்துள்ளது. ஆண்டவரின் பொறுமையை குறித்து சொல்லப்பட்டுள்ள வசனங்களின்படி தன்னைக் காத்துக்கொண்ட பிலதெல்பியா சபை மக்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவரின் பொறுமை குறித்து விவிலியம் என்னக் கூறுகின்றது?.  பாவம் உண்டாகுமுன்பு ஆண்டவரின் வெளிபடுதல் அன்றாடம் காணப்பட்டது என்பதை ஆதி 3:8 ல் காண்கின்றோம். பாவம் மனிதனையும் உலகத்தையும் தேவனிடமிருந்து விலக்கிய பின்பே தேவன் தம்மை விலக்கிக் கொண்டார். காரிருளை மறைவிடமாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து தேவனுடைய வெளிபடுதலுக்காக மனுகுலம் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. மேலும் தேவன் தமது கிரியைகளையும், வெளிபடுதல்களையும் கால ஒழுங்குக்குள் அமைத்துக் கொண்டார். அவருடைய வேளையில்தான் அவர் செயல்படுவார். இவ்விதம் ...

CCM Tamil Bible Study - உனக்கு தருவேன்

உனக்கு தருவேன்  வெளி 3:9a. பொய் சொல்லுகிற சாத்தானின் கூட்டத்தாரை உனக்கு தருவேன். வெளி2:9;1நாளா21:1;யோபு2:6;ச109:6;சக3:1;மாற்4:15;லூக்10:18;22:3,31;யோவா13:27;அப்5:3;ரோமர்16:20;2கொரி11:14;1தீமோ5:15. விவிலியத்தை வாசிக்கும்போது பிசாசானவனோ, அல்லது அவனை பின்பற்றுகிறவர்களோ தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்பட தேவனே அனுமதிக்கின்றதை காண்கின்றோம். நான்கு காரியங்களுக்காக இவ்வாறு செய்கின்றார் தேவன்.   முதலாவது தேவன் தமது பிள்ளைகளைசோதித்துப் பார்க்க சாத்தானையும், அவன் கூட்டத்தையும் தேவ பிள்ளைகளின் தலைமேல் ஏறிப்போக அனுமதிக்கின்றார். ஒருவேளை தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்கு கீழ்படியாமல் இருந்திருக்கக்கூடும். இல்லையெனில் தேவ பிள்ளைகள் மீது சாத்தான் தேவனிடம் குற்றசாட்டுகளை வைத்திருக்கக்கூடும். ஆகவே தேவனுடைய பிள்ளைகள் தேவனை விட்டு எவ்வளவு தூரம் விலகிப்போனார்கள் என்பதை அறியும்படி உபாதிக்கிறவர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். இஸ்ராயேலர் தேவனுக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் சுற்றிலும் இருந்த எதிராளிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்து வாதித்ததை விவிலியத்தில் படிக்கின்றோம். நம் வாழ்வில் உண்டாகும் தீர...

CCM Tamil Bible Study - பூட்ட இயலாத கதவு

பூட்ட இயலாத கதவு  வெளி 3:8e. அதை ஒருவனும் பூட்டமாட்டான். தேவன் ஏற்படுத்தும் திறந்தவாசலை மனிதர்களோ, அரசாங்கமோ, மாம்ச புயபலமோ, படைபலமோ பூட்ட இயலாது என்பது தேவனின் வாக்கு ஆகும். நாம் ஏற்கனவே மூன்று வாசல்கள் தேவனால் திறக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்று அறிந்தோம். பரலோகத்தின் கதவுகளை பூட்டக்கூடிய ராஜ்யங்களோ, அரசாங்கங்களோ இவ்வுலகில் இல்லை. சாத்தானால் கூட தேவராஜ்ய கதவை பூட்ட முடியாது. இயேசு கிறிஸ்து பரதீசுக்குள் நுழைந்து இந்த வாசலை திறந்து வைத்தார். ஆகவே, தேவராஜ்யத்தில் நுழைய தகுதி படைத்தவர்கள் யாவரும் உள்ளே நுழைந்து பரம இளைப்பாறுதலை அடையலாம். சபைகளின் கதவுகளும் திறந்தே வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து உயிரோடிருக்கிறதினாலும், சபையை கிறிஸ்து இன்னும் தன்னோடு சேர்த்துக் கொள்ளாததினாலும் திருச்சபைகளின் கதவுகளை உலகத்தின் இஸங்களோ, இயக்கங்களோ எவராலும் பூட்ட முடியாது. சபைக்குள் ஜனங்கள் திரள்திரளாய் சேர்க்கப்படுவதை ஒருவராலும் தடுக்க முடியாது. சபை உருவான காலத்திலிருந்து இன்று வரையிலும்  ஒழிக்க எழும்பியவர்கள்தான் காணாமற்போனார்கள். சபை இன்றும் உயிருடன் காணப்படுகிறது. இஸ்லாம் உருவான காலங்களில் வளைகுடா...

CCM Tamil Bible Study - திறந்த வாசல்

திறந்த வாசல் வெளி 3:8d. இதோ திறந்தவாசலை உனக்கு முன்பாக வைக்கிறேன். வெளி3:7;1கொரி16:9;2கொரி 2:12;கொலோ 4:3,4;அப்14:27;எபே 6:20.  இச்சொல் ஒருசில வியாக்கியானங்களை நம்க்கு சொல்லிக்காட்டுகின்றது. முதலாவது, தெவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கும்படியான வாசல் திறந்திருப்பதைக் குறிக்கின்றது. பாவத்தினிமித்தம் உண்டான தேவ கோபத்தில் தேவன் ஏதேனுக்கு போகும் வாசலை அடைத்துப் போட்டார். கர்த்தராகிய இயேசு அந்த பாவத்துக்கு பரிகாரம் உண்டாக்கியதினால் ஒருசில நிபந்தனைகளின் அடிப்படையில் பரதீசின் வாசலை திறந்தார் தேவன். இந்த திறந்தவாசல் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழையும்படியான திறந்தவாசல் ஆகும். இந்த வாசல் வழியாய் நுழைவதற்கு ராஜ்யத்தின் புத்திரர் தடுமாறும் நேரத்தில் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகிறவர்கள் ராஜ்யத்துக்குள் பிரவேசித்து முற்பிதாக்களோடு பந்தியிருப்பார்கள். இந்த திறந்த வாசல் வழியாய் பிரவேசிப்பதற்கு பலர் பலவந்தம் பண்ணுகிறார்கள். பலவந்தம் பண்ணுகிறவர்கள் பிரவேசிக்கிறார்கள். மத் 11:12;லூக்கா16:16;மத் 8:11,12. இந்த திறந்தவாசல் அடைபடுமுன்பு தேவ ராஜ்யத்தில் பிரவேசிக்க முயற்சிப்போமாக.  இரண்டாவது, கிறி...

CCM Tamil Bible Study - வசனத்தைக் கைக்கொள்ளுதல்

வசனத்தைக் கைக்கொள்ளுதல் வெளி 3:8c. என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே. வெளி3:10;22:7;யோவா14:21-24;15:20;17:6;2தீமோ4:7.  வசனம் என்றசொல் லோகாஸ் என்பதைக் குறிக்கின்றது. உயிருள்ள ஒருவரால் உரைக்கப்படும் வார்த்தையைக் குறிக்கின்றது. இச்சொல் புதிய ஏற்பாட்டில் 325 தடவைகள் வந்துள்ளது. இயேசு கிறிஸ்துவையும் இச்சொல் குறிக்கின்றது என்பதை யோவான் நற்செய்தி நூலில் காண்கின்றோம். இங்கு இயேசுவையல்ல இயேசுவை குறித்து ஆதி அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகளைக் குறிக்கின்றது. பிலதெல்பியா சபையாருக்கு யார் இயேசுவைக் குறித்து பிரசங்கித்தார்களோ அந்த வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ தங்களை ஒப்புக்கொடுத்தனர். கைக்கொள்ளுதல் என்பது ஏற்றுக்கொள்வதையும், விசுவாசித்தலையும், பின்பற்றுதலையும் குறிக்கின்றது.  வசனத்தை கைக்கொள்ளுதல் என்பது எதனைக் குறிக்கின்றது? முதலாவது வசனத்தை பிரசங்கித்தவர்களை அங்கீகரித்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருளாகின்றது. அவர்கள் யாரென்று அறிய முயற்சிப்பதைவிடவும், அவர்கள் கொண்டுவந்த செய்தி எத்தகையது என்பதில் மட்டுமே கவன்ம் செலுத்தினர்.  அடுத்...

CCM Tamil Bible Study - கிறிஸ்துவை மறுதலிக்காதவர்கள் - Those who do not deny Christ

கிறிஸ்துவை மறுதலிக்காதவர்கள் வெளி3:8b. கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலிக்கவில்லை. வெளி2:13;மத் 26:70-72;லூக்12:9;அப்3:13,14;1தீமோ5:8;1யோவா2:22,23;யூதா 1:4;நீதி 30:9.  பேதுரு இயேசுவை விசுவாசித்தார், அறிக்கையுமிட்டார். ஆனால் மாம்சீக முறையில் இயேசுவை தெரியாது என்று சொல்லி மறுதலித்தார். நாமத்தை மறுதலித்தல் என்பது இயேசுவை மறுதலித்தல் ஆகும். விசுவாசத்தை மறுதலிப்பதற்கும், கிறிஸ்துவை மறுதலிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. பிலதெல்பியா சபையார் இயேசுவை தனிபட்ட முறையில் மறுதலிக்கவில்லை. பேதுருவைப்போல அவரை எங்களுக்கு தெரியாது என்று சொல்லவில்லை.  மாம்சத்தில் வந்த இயேசுவை அறிக்கை செய்கிறவர்களாக இருந்தார்கள். இயேசுவை எங்களுக்கு தெரியும் என்றும், நாங்கள் அவரை மட்டுமே பின்தொடர்வோம் என்றும் அழுத்தமாக கூறினார்கள். கொஞ்சம் பெலன் இருந்தும் என்பது இருவிதமான பொருளை தருகின்றது. ஒரு பொருள் குறித்து நேற்றையதினம் சிந்தித்தோம். இரண்டாவது கருத்துப்படி, பிலதெல்பியா சபை மக்கள் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளப்பட்டார்கள். தேசத்தின் – சமூகத்தின் – அரசியலின் கட்டமைப்போடு இணைந்து போகாததினால் வறுமையையும், த...

CCM Tamil Bible Study - அவரே அவர்

  அவரே அவர் வெளி 3:7e. ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்ககூடாதபடிக்கு பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது.. வெளி 5:3-5,9;யோபு11:10;12:14;மத்16:19.  ஒரு அறையை அவர் பூட்டினால் அதை வேறு ஒருவரும் திறக்க முடியாது. அதே அறையை அவர் திறந்தால் அதை வேறு ஒருவரும் பூட்ட முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவருடைய இருதயத்தை திறப்பாரானால் அதை அந்நபரோ அல்லது வேறு யாருமோ தடுக்க முடியாது. அவர் ஒருவரின் இருதயத்தை அடைப்பாரானால் வேறு ஒருவரும் அந்த இருதயத்தை திறக்க முடியாது. இக்காரியமானது இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மைகள் சிலவற்றை குறிப்பிடுகின்றது.  முதலாவது, சபைக்குள் சேர்க்கிறவர் அவர் மட்டுமே. எவரொருவர் சுவிசேஷத்தை அறிவித்தாலும், அற்புத கிரியைகளை நடப்பித்தாலும் ஆத்துமாக்களை இரட்சிக்கிறவர் அவரே. இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் சபையிலே சேர்க்கிறார். அப் 2:47. இரட்சிப்பதும், சபையில் சேர்ப்பதும் அவருடைய வேலை. ஊழியகாரனின் வேலை பிரசங்கிப்பது மட்டுமே. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். இந்த விசுவாசி என்னுடைய விசுவாசி என்று சொல்லுவதற்க...