CCM Tamil Bible Study - வசனத்தைக் கைக்கொள்ளுதல்
- Get link
- X
- Other Apps
வசனத்தைக் கைக்கொள்ளுதல்
வெளி 3:8c. என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே. வெளி3:10;22:7;யோவா14:21-24;15:20;17:6;2தீமோ4:7.
வசனம் என்றசொல் லோகாஸ் என்பதைக் குறிக்கின்றது. உயிருள்ள ஒருவரால் உரைக்கப்படும் வார்த்தையைக் குறிக்கின்றது. இச்சொல் புதிய ஏற்பாட்டில் 325 தடவைகள் வந்துள்ளது. இயேசு கிறிஸ்துவையும் இச்சொல் குறிக்கின்றது என்பதை யோவான் நற்செய்தி நூலில் காண்கின்றோம். இங்கு இயேசுவையல்ல இயேசுவை குறித்து ஆதி அப்போஸ்தலர்களால் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகளைக் குறிக்கின்றது. பிலதெல்பியா சபையாருக்கு யார் இயேசுவைக் குறித்து பிரசங்கித்தார்களோ அந்த வார்த்தைகளைக் கேட்டு விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ தங்களை ஒப்புக்கொடுத்தனர். கைக்கொள்ளுதல் என்பது ஏற்றுக்கொள்வதையும், விசுவாசித்தலையும், பின்பற்றுதலையும் குறிக்கின்றது.
வசனத்தை கைக்கொள்ளுதல் என்பது எதனைக் குறிக்கின்றது?
முதலாவது வசனத்தை பிரசங்கித்தவர்களை அங்கீகரித்தார்கள், ஏற்றுக்கொண்டார்கள் என்று பொருளாகின்றது. அவர்கள் யாரென்று அறிய முயற்சிப்பதைவிடவும், அவர்கள் கொண்டுவந்த செய்தி எத்தகையது என்பதில் மட்டுமே கவன்ம் செலுத்தினர்.
அடுத்தபடியாக, வசனத்தின் மையமாகிய இயேசுவை கானாதவர்களாகவும், அறியாதவர்களாகவும் இருந்தாலும் இயேசு கிறிஸ்துவை குறித்த காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவரை தங்கள் மனகண்களில் பதித்துக் கொண்டார்கள்.
மூன்றாவது தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதற்கான வழிமுறைகளை வசனத்தை பிரசங்கித்தவர்களிடம் கேட்டு அறிந்தார்கள். அதன்படி வாழ பிரயாசப்பட்டார்கள். இவ்விதம் நடந்துக் கொண்டதினால் தங்களை சேர்ந்தவர்களிடமிருந்து தங்களை தனிமைப் படுத்திக் கொண்டார்கள். தங்களை வேறுபடுத்திக் கொண்டார்கள். இவ்விதம் தங்களை வேறுபடுத்திக் கொண்டதினால் துன்பங்கள் உண்டாயிற்று. எவ்விதமான நெருக்கடிகளிலும் இடறிப்போகாமலிருந்தார்கள். துன்பங்கள் தங்களை இன்னும் கிறிஸ்துவுக்கு ஏற்ற பாத்திரங்களாக மாற்றுவதை உணர்ந்தார்கள்.
வசனம் ஒரு மனிதனுக்குள் பதியுமானால் மற்றெல்லாவற்றையும் விட்டுவிடவே முயற்சி செய்வான். வசனத்தோடு இணையாதவைகள் எதுவாயிருந்தாலும் அவைகளை புறந்தள்ளுவார்கள். இக்காலத்தில் வசனமும் வேண்டும், உலக காரியங்களும் வேண்டும் என்ற நியமம் உடையவர்களாக மக்கள் உள்ளனர். அப்படியிராதபடிக்கு வசனத்தைக் கொண்டு இயேசுவின் சாயலை நம்மில் கட்டியெழுப்ப முயற்சிப்போமாக.
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24…
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment