CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - நீ காத்துக் கொண்டபடியால்

நீ காத்துக் கொண்டபடியால்

வெளி 3:10a. என் பொறுமையை குறித்து சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியால்…. வெளி 1:9;13:10;14:12;லூக்கா 8:15;9:41;21:19;ரோமர் 2:4;3:25;15:4,6. 

பொறுமை என்றால் நோக்கத்தில் தளர்வு இல்லாத, ஒரே சீரான தன்மை, துன்ப தாங்கும் மனத்தண்மை, பாரம் தாங்குதல், விடா முயற்சி என்று பொருள் கொள்ளப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் 32 தடவைகள் வந்துள்ளது. ஆண்டவரின் பொறுமையை குறித்து சொல்லப்பட்டுள்ள வசனங்களின்படி தன்னைக் காத்துக்கொண்ட பிலதெல்பியா சபை மக்கள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆண்டவரின் பொறுமை குறித்து விவிலியம் என்னக் கூறுகின்றது?. 

பாவம் உண்டாகுமுன்பு ஆண்டவரின் வெளிபடுதல் அன்றாடம் காணப்பட்டது என்பதை ஆதி 3:8 ல் காண்கின்றோம். பாவம் மனிதனையும் உலகத்தையும் தேவனிடமிருந்து விலக்கிய பின்பே தேவன் தம்மை விலக்கிக் கொண்டார். காரிருளை மறைவிடமாக்கிக் கொண்டார். அன்றிலிருந்து தேவனுடைய வெளிபடுதலுக்காக மனுகுலம் காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. மேலும் தேவன் தமது கிரியைகளையும், வெளிபடுதல்களையும் கால ஒழுங்குக்குள் அமைத்துக் கொண்டார். அவருடைய வேளையில்தான் அவர் செயல்படுவார். இவ்விதம் ஆண்டவர் தம்முடைய நேரத்தில் செயல்படுவதை அறியாத மனுகுலம்மேலும் மேலும் ஆண்டவரை விட்டு விலகிப் போயிற்று. ஆபிரகாம் போன்ற சிலரோ இவைகளை உணர்ந்தவர்களாய் பொறுமையுடன் காத்திருந்தனர். 

ஆண்டவர் பொறுமையாயிருக்கிறார் என்றால் மனிதர்கள் அமைதி காக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களை விட்டுவிட்டு அமைதியாய் அவரின் வெளிபடுதலுக்காய், கிரியைகளுக்காய் காத்திருக்க வேண்டும். தேவனுடைய மனிதர்கள் பல காலங்கள் காத்திருந்துள்ளனர். 

ஆண்டவரின் வேளையும் ஆண்டவரின் பொறுமையும், நமது காத்திருக்குதலும் இணைந்து வருமானால் அங்கு தேவனின் இராஜாங்கம் வெளிப்படும். அநேக வீழ்ச்சிகளுக்கும், பின்மாற்றங்களுக்கும், முறுமுறுப்புகளுக்கும் காரணம் இந்த மூன்றையும் புரிந்துக் கொள்ளாததுவேயாகும். ஆபிரகாமும் இதனை புரிந்துக்கொள்ளாததினால்தான் சாராளின் பேச்சுக்கு செவிகொடுத்து துஷ்ட ஜனமாகிய இஸ்மயேலின் சந்ததியை பிறப்பித்தான். இந்த ஆபிரகாமைப் போல காத்திருக்கும் மனநிலை இல்லாமல் கேடுகளிலும், ஆபத்துகளிலும், துன்பங்களிலும், வேதனைகளிலும் அகப்பட்டு சிக்குண்டு கிடப்போர் எத்தனை பேர். ஆண்டவரின் பொறுமையான அசைவுகள், கிரியைகள், வெளிபாடுகள் யாவும் நம்மை ஊன்ற கட்டியெழுப்பும் உன்னதமான திட்டங்களேயாகும். இதை உணர்ந்து அவரின் கிரியைகளுக்காய் காத்திருப்போமாக. 

அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. ரோமர் 2:4,5.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்