CCM Tamil Bible Study - உனக்கு தருவேன்
- Get link
- X
- Other Apps
உனக்கு தருவேன்
வெளி 3:9a. பொய் சொல்லுகிற சாத்தானின் கூட்டத்தாரை உனக்கு தருவேன். வெளி2:9;1நாளா21:1;யோபு2:6;ச109:6;சக3:1;மாற்4:15;லூக்10:18;22:3,31;யோவா13:27;அப்5:3;ரோமர்16:20;2கொரி11:14;1தீமோ5:15.
விவிலியத்தை வாசிக்கும்போது பிசாசானவனோ, அல்லது அவனை பின்பற்றுகிறவர்களோ தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக செயல்பட தேவனே அனுமதிக்கின்றதை காண்கின்றோம். நான்கு காரியங்களுக்காக இவ்வாறு செய்கின்றார் தேவன்.
முதலாவது தேவன் தமது பிள்ளைகளைசோதித்துப் பார்க்க சாத்தானையும், அவன் கூட்டத்தையும் தேவ பிள்ளைகளின் தலைமேல் ஏறிப்போக அனுமதிக்கின்றார். ஒருவேளை தேவனுடைய பிள்ளைகள் தேவனுக்கு கீழ்படியாமல் இருந்திருக்கக்கூடும். இல்லையெனில் தேவ பிள்ளைகள் மீது சாத்தான் தேவனிடம் குற்றசாட்டுகளை வைத்திருக்கக்கூடும். ஆகவே தேவனுடைய பிள்ளைகள் தேவனை விட்டு எவ்வளவு தூரம் விலகிப்போனார்கள் என்பதை அறியும்படி உபாதிக்கிறவர்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கிறார். இஸ்ராயேலர் தேவனுக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் சுற்றிலும் இருந்த எதிராளிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்து வாதித்ததை விவிலியத்தில் படிக்கின்றோம். நம் வாழ்வில் உண்டாகும் தீராத வியாதிகள், கடன்கள், குறைகள், குறைந்துபோகும் தன்மை ஆகியவைகள் உண்டாகும்போது நாம் யாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளோம் என்பதையும், ஏன் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளோம் என்பதையும் அறிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இரண்டாவது சாத்தான் வெட்கப்பட்டுப்போகும்படியாக தேவ பிள்ளைகளை சாத்தானிடமோ, அவனுடைய ஆட்களிடமோ ஒப்புக் கொடுக்கிறார். இவர்கள் விசுவாசத்திலும், கீழ்படிதலிலும், தாழ்மையிலும், தூய்மையிலும், வைராக்கியத்திலும் பலசாலிகளாய் இருப்பதினால் இவர்கள் மேல் சுமத்தப்படும் குற்றசாட்டுகள் பொய்த்துப்போகும். யோபுவுக்கு கொடுக்கப்பட்ட உபத்திரவங்கள் யாவும் திரும்ப சாத்தானை யோபுவிடம் நெருங்கவியலாதபடிக்கு தோல்விகளை ஜெயமாக மாற்றிக்கொண்டார். விசுவாசத்தை இழக்காத தேவ பிள்ளைகள் விசுவாசத்தில் உறுதியாய் நின்று சாத்தான் வெட்கப்பட்டு போகும்படி செயல்படுகின்றார்கள்.
அடுத்துள்ள காரணத்தை நாளையதினம் தியானிக்கலாம்.
நம் வாழ்வினூடே பொய்யர்கள், திருடர்கள், பாவிகள், துன்மார்க்கர்கள், சன்மார்க்கர்கள், அக்கிரமகாரர்கள், வஞ்சகர்கள் கடந்துப்பொகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். நாம் இவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து நம்மை விலக்கிக்கொள்ளாவிட்டால் இவர்களின் கள்ள போஜனத்திற்கும், கண்ணிகளுக்கும் அகப்பட்டு விடுவோம். சுற்றிலும் நடப்பதை கவனி. ஆனால் சுற்றிதிரிய விரும்பாதே. உலகம் முழுவதும் அக்கிரமத்தில் திளைத்திருக்க நோவாவின் குடும்பம் மாத்திரம் தனித்துக் காணப்பட்டது. அதற்கு காரணம் தங்களை சுற்றி நடக்கிறவைகளை கண்டு மனம் வருந்தி தேவனிடம் அறிக்கையிட்டு ஜெபித்த்தேயாகும்.
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். 2பேதுரு 2:7-9..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment