Posts

Showing posts from January, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

The Lord built Daniel - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட தானியேல்

கட்டி எழுப்பப்பட்ட தானியேல் ★ தானியேல் என்றால் நியாயதீர்ப்பு என்றுப் பொருள். ★ பிரதான நான்கு தீர்க்கதரிசிகளில் இருவர். ★ இவர் வாழ்ந்தகாலம் கிமு 623 முதல் 538 வரை . ஏறக்குறைய 85 வயது வரையிலும் வாழ்ந்தார்.  ★ இவர் யூதா கோத்திரத்தான். ★ தாவீதின் குலத்தான். ★ இராஜ வம்சத்தான். ★ இவருடைய நெருங்கிய நண்பர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆவர்.  ★ இவர் கிமு 623 ல் இஸ்ராயேலில் பிறந்தார்.  ★ கிமு 606 ல் யூதாவின் அரசன் யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் இராஜா நேபுகாத்நேசாரால் அதாவது தனது 17 ஆவது வயதில் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டு அங்கு சிறைகைதியானார்.  ★ இவரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள்தான் இவரின் நண்பர்கள் ஆவர்.  ★ பாபிலோனில் இவருக்கு பெல்தெஷாத்சர் என்ற கல்தேய பெயர் சூட்டப்பட்டது. இதற்கு பேலின் இளவரசன் என்றுப் பொருள்.       இஸ்ராயேலில் 13 வயதிற்குள் யூதசமய கல்வி கிடைத்திருந்தாலும் சிறைபிடிக்கப்பட்ட தேசத்தில் பாபிலோனிய கல்வியும் இவருக்கு கிடைத்தது.  இந்த பாபிலோனிய கல்வி கிடைக்க காரணம் இரண்டு உண்டு. இவர்கள் அழகானவர்களும், திறமையுள்ள...

The Lord built Peter - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பேதுரு

கட்டி எழுப்பப்பட்ட பேதுரு ★ பேதுரு – கேபா – கற்பாறை.. பேதுரு என்ற சொல்லின் பத்றோஸ் என்ற கிரேக்க பெயரே தமிழில் பேதுரு என்றாயிற்று. ★ முதல் பெயர் – சீமோன் – கேட்கிறவன்.  ★ தகப்பனார் பெயர் – யோனா ★ சகோதரன் – அந்திரேயா. ★ மீன்பிடிகாரன்.  ★ ஊர் – பெத்சாய்தா  ★ இயேசுவின் பிரதான சீடன். ★ முன்பதாக யோவான் ஸ்நானகனின் சீடன்.  இந்த பேதுருவின் மேன்மை  1. இயேசுவின் தெய்வீகதன்மையை உணர்ந்தவன் யோவான் 6:68,69. - சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.      விசுவாசத்தின் அடிப்படை சத்தியம் இதுவே.  இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பது. யோவான் 20:31. 2. வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டவன் மத்தேயு 16:13-20. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.  ...

The Lord built Jabez - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட யாபேஸ்

கட்டி எழுப்பப்பட்ட யாபேஸ் 1நாளாகமம் 4:9,10 2கொரிந்தியர் 6:3-10 மாற்கு 12:1-11 மனிதவாழ்க்கை 4 பருவங்களைக் கொண்டது ★ பிறப்பின் பருவம் அல்லது குழந்தை பருவம்  இது யாவராலும் நேசிக்கப்படுகிற காலம். ★  வாலிப பருவம்  - புதிய அனுபவங்களை நாடும் பருவம். ★  குடும்ப பருவம்  - உறவுகளின் இனிமை. ஒருவரில் ஒருவர் கரிசனை காட்டும் பருவம். ★  முதிர்ந்த பருவம்  - யாவராலும் வெறுக்கப்படுகிற ஒரு பருவம்.  நாம் விரும்புகிறோமோ இல்லையோ இந்த பருவத்திற்குள் வந்துதானாக வேண்டும். பிறப்பில் நம் மலம், ஜலம் எடுத்த தாய் இப்பொழுது இல்லை. தனிமையின் காலங்கள்  இங்கு யாபேஸின் வாழ்வில் எல்லாம் நேர் எதிராக நடக்கிறது 1. துக்கத்தால் நிரம்பியவன் மகிழ்ச்சியின் மனிதனரானார் தாய்: நான் இவனை துக்கத்தோடு பெற்றேன்.  யாபேஸ் என்றால் வருத்தம் நிறைந்தவன் என்று பொருள்.  பிறப்பே வேதனையின் பருவம். சங்கீதம் 51:5 - தாவீது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்.  இதனால் தான் வருத்தம், வேதனை எல்லாம்.  ஆனால் ஆண்டவர்……சொல்லுகிறார்….. எரே 1:5 - நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்...

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்

கட்டி எழுப்பப்பட்ட பவுல்      சவுல் - விரும்பபட்டவன். இது எபிரேய பெயர்.  பவுல் - சிறுமை - சிறிய. லத்தீன் மொழி தொடர்புடைய கிரேக்க பெயர். இஸ்ராயேலனாயிருந்தாலும் உரோம குடியுரிமை பெற்றவர். தர்சு பட்டணத்து இஸ்ராயேலன். பென்யமீன் கோத்திரத்தான். யூதன், பரிசேயன். எருசலேமில் கமாலியேலின் பாதத்தில் ரபீக்களுக்குரிய கல்வி கற்றவன். இப்படிபட்ட பவுலின் வாழ்வில் இருவித கட்டுதல்கள் நடந்தேறின 1. பவுல் தனக்குதானே கட்டியெழுப்பப்பட்டவர் ✔அதாவது யூத சமயத்தால் கட்டியெழுப்பப்பட்டவர்.  2கொரிந்தியர் 11:22  ✔செல்வத்தினால் கட்டியெழுப்பட்டார்.  ✔கல்வியறிவினால் கட்டியெழுப்பப்பட்டார். அப்26:24; 2கொரி11:6 விவிலிய அறிவு உள்ளவர்.  ✔சமய வைராக்கியத்தினால் கட்டியெழுப்பப்பட்டவர். அப்21:20; 22:3; ரோம10:2 ✔குல பெருமையினால் கட்டியெழுப்பப்பட்டவர். 2கொரி11:22      இவ்வளவு மேன்மை, புகழ் இருந்தும் இயேசு கிறிஸ்துவின் சிறிய ஒளியின் முன்பாக இந்த கட்டபடுதல் யாவும் உடைந்து விழுந்தன, எல்லாம் இடிக்கப்பட்டுப் போயிற்று. பைத்தியகாரனாக மாறினார்.  ஆனால்….. 2. பவுல் இயேசு கிறிஸ்துவால் ...

The Lord built Abraham - CCM Tamil Bible Study - கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார்

கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார் ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்கு தகப்பன். குழந்தையில்லாதவரை திரள் ஜன தகப்பனாக பெயர்சூட்டிய தேவன். முதலில் அவரின் சிந்தையில் கட்டுதலை ஏற்படுத்தினார். இது முதல் நான் மலடனல்ல, திரள் ஜனத்தின் தகப்பன் என்று சொல்லி திரிந்தார். பெயர் மாற்றம் அவசியமானது. பழைய பெயர் சாபத்தின் பெயர். புதிய பெயர் ஆசீர்வாதத்தின் பெயர்.  ஆபிரகாமின் கிரியைகளில் கட்டுதலை ஏற்படுத்தினார்.  சாராள் கற்பவதியாகும்படியாக, நின்றுபோன தாம்பத்யத்தை ஆண்டவரை நம்பி ஆபிரகாமும் சாராளும் செயல்படுத்தினர். இதன்மூலம் சாராள் கற்பவதியானாள். ஆபிரகாமின் வாழ்வில் கட்டுதலை ஏற்படுத்தினார். பிள்ளையில்லாதவனை பிள்ளையுடையவானாக்கி சந்ததிகளை பெருக செய்தார். தன் காலத்திலேயே தன் பேரப்பிள்ளைகளையும் கண்டார்.  ஆம்….பிள்ளை கொடுத்து ஆபிரகாமின் குடும்பத்தை கட்டினார். தேசத்தை கொடுத்து ஆபிரகாமின் வீட்டைக் கட்டினார். திரளான சம்பத்தை கொடுத்து ஆபிரகாமின் ஊழியத்தை கட்டினார்.  நாமும் ஆபிரகாமை போல கட்டப்பட என்ன செய்ய வேண்டும்? ஆபிரகாம் செய்தது என்ன? 1. கட்டளைக்கு கீழ்படிந்தார்  முதல் கட்டளை – ஆதி 12:1 ...