கட்டி எழுப்பப்பட்ட பேதுரு
★ பேதுரு – கேபா – கற்பாறை.. பேதுரு என்ற சொல்லின் பத்றோஸ் என்ற கிரேக்க பெயரே தமிழில் பேதுரு என்றாயிற்று.
★ முதல் பெயர் – சீமோன் – கேட்கிறவன்.
★ தகப்பனார் பெயர் – யோனா
★ சகோதரன் – அந்திரேயா.
★ மீன்பிடிகாரன்.
★ ஊர் – பெத்சாய்தா
★ இயேசுவின் பிரதான சீடன்.
★ முன்பதாக யோவான் ஸ்நானகனின் சீடன்.
இந்த பேதுருவின் மேன்மை
1. இயேசுவின் தெய்வீகதன்மையை உணர்ந்தவன்
யோவான் 6:68,69. - சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
விசுவாசத்தின் அடிப்படை சத்தியம் இதுவே.
இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பது. யோவான் 20:31.
2. வெளிப்பாடுகளை பெற்றுக்கொண்டவன்
மத்தேயு 16:13-20. இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
மாம்ச, இரத்த வெளிப்பாடுகள் அல்ல, பிதாவின் வெளிப்பாடுகளை பெற்றவர்.
இதனால்தான் 1பேது1:20 ல் இயேசு இந்த கடைசி காலத்தில் வெளிப்பட்டார் என்றான்.
3. இயேசுவை முழு மனதோடு பின்பற்றினான்
மத்தேயு 4:22 - உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
ஏன்?...
லூக்கா 22:33 ல் அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
ஆம் இயேசுவை முழு மனதோடு பின்பற்றினான்.
4. இயேசுவை முழு மனதோடு நேசித்தான்
யோவான் 18:10 - அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்.
இயேசுவுக்கு ஒண்ணுண்ணா அவனால் பொறுக்க முடியாது.
அவ்வளவாய் அவரை நேசித்தான்.
இப்படிப்பட்ட பேதுரு இயேசுவுக்கு எதிராக சில காரியங்களை செய்து பின்வாங்கினான்
1. சாத்தானாகவும், இடறலாகவும் காணப்பட்டான்
மத்தேயு 16:22,23 - பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
2. இயேசுவை தெரியாது என்று 3 தரம் மறுதலித்தான்
மத்தேயு 26:34, 69-74, லூக்கா 12:8-12,.
3. பழைய வேலைக்கு திரும்பினான்
யோவான் 21:3 - சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள்.
அப்பொழுது மீன் பிடிக்கிறவன் மனுஷரை பிடிக்க அழைக்கப்பட்டான்
இப்பொழுது மனுஷரை பிடிக்க அழைக்கப்பட்டவன் மீன் பிடிக்க போகிறான்.
தானும் கெட்டு மற்றவர்களயும் கெடுத்தான்.
இவ்விதம் பின்வாங்கிப்போன பேதுரு மறுபடியும் கட்டியெழுப்பப்பட்டார்
அதற்கு இரு காரணங்கள் உண்டு…
1. மனங்கசந்து அழுதான்
மத் 26:75 - அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.
தவறை உணர்ந்து அழுதான்.
நீதி 28:13 - தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
அவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு அழுததினால் அவர் தன் பங்கை செய்தார்.
அதாவது…..
2. அவனை பின்தொடர்ந்துபோய் பின்மாற்றத்திலிருந்து விடுவித்தார்
யோவான் 21:15-17.
பசியினால் பின்மாற்றம்.
பயத்தினால் பின்மாற்றம்.
இயேசு அவனை சந்தித்து அற்புதம் செய்து பசியாற்றி, பயத்தையும் நீக்கினார்.
இதனால் திரும்பவும் மனிதர்களை பிடிக்கிறவனாக்கப்பட்டான்.
மீண்டும் கட்டப்பட்ட பேதுரு
1. திரளான ஆத்துமாக்களை சம்பாதித்தார்
அப்2:41 – 3000
4:4 – 5000
5:14 – திரளாய்..
2. பெரிய அற்புதங்களை செய்கிறவரானார்
அப் 5:15,16 – நிழல் பட காத்திருந்தனர்.
3. அவன் முன்பாக பொய் சொல்லி வாழமுடியாது
அப் 5:1-12.
4. நிருபங்களை எழுதினார்
1,2 பேதுரு
முதல் சுவிசேஷமாகிய மாற்கு எழுதப்பட காரணமாயிருந்தார்.
5. முதல் சபையை உருவாக்கினார்
அப் 2.
பெந்தகோஸ்தே அன்று ஆவியானவரின் நினைவுக்குள் வழிநடத்தினார்
நம்மில் பின்வாங்கிப்போனவர்களையும் அவர் சந்தித்து திரும்ப கட்டியெழுப்ப வல்லவராயிருக்கிறார்.
Comments
Post a Comment