கட்டி எழுப்பப்பட்ட தானியேல்
★ தானியேல் என்றால் நியாயதீர்ப்பு என்றுப் பொருள்.
★ பிரதான நான்கு தீர்க்கதரிசிகளில் இருவர்.
★ இவர் வாழ்ந்தகாலம் கிமு 623 முதல் 538 வரை . ஏறக்குறைய 85 வயது வரையிலும் வாழ்ந்தார்.
★ இவர் யூதா கோத்திரத்தான்.
★ தாவீதின் குலத்தான்.
★ இராஜ வம்சத்தான்.
★ இவருடைய நெருங்கிய நண்பர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆவர்.
★ இவர் கிமு 623 ல் இஸ்ராயேலில் பிறந்தார்.
★ கிமு 606 ல் யூதாவின் அரசன் யோயாக்கீமின் காலத்தில் பாபிலோனின் இராஜா நேபுகாத்நேசாரால் அதாவது தனது 17 ஆவது வயதில் சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்டு அங்கு சிறைகைதியானார்.
★ இவரோடு சிறைபிடிக்கப்பட்டவர்கள்தான் இவரின் நண்பர்கள் ஆவர்.
★ பாபிலோனில் இவருக்கு பெல்தெஷாத்சர் என்ற கல்தேய பெயர் சூட்டப்பட்டது. இதற்கு பேலின் இளவரசன் என்றுப் பொருள்.
இஸ்ராயேலில் 13 வயதிற்குள் யூதசமய கல்வி கிடைத்திருந்தாலும் சிறைபிடிக்கப்பட்ட தேசத்தில் பாபிலோனிய கல்வியும் இவருக்கு கிடைத்தது.
இந்த பாபிலோனிய கல்வி கிடைக்க காரணம் இரண்டு உண்டு. இவர்கள் அழகானவர்களும், திறமையுள்ள வாலிபர்களுமாயிருந்ததினால். பாபிலோனிய அரண்மனையில் அரசு பணியாற்ற திறமையுள்ளவர்கள் வேண்டுமென்பதினால் இவர்களுக்கு மூன்று வருட கல்வி கொடுக்கப்பட்டது 1:5. இக்கல்வியின் சிறப்பம்சங்கள், பாபிலோனிய மொழி, பண்பாடு கற்றுக்கொள்ள வேண்டும். இராஜ உணவை மட்டுமே உண்ன வேண்டும். 3 வருடங்கள் கழிந்து இண்டர்வியூ வைத்துதான் வேலைக்கு தெரிந்துக்கொள்ளப்படுவர்.
மூன்று வருடங்கள் தாண்டி நடத்தப்பட்ட இண்டர்வியூவில் தானியேலோடு மற்ற மூன்று நண்பர்களும் அரசு பணிக்கு தேர்வானார்கள். இவருக்கு மனைவி பிள்ளைகள் உண்டு என்று சில பாரம்பரியங்கள் கூறுகின்றது. இவர் ஏறக்குறைய 6 அரசர்களின் கீழ் வேலைபார்த்தார் என்று நம்பப்படுகின்றது. யூதாவின் அரசன் யோயாக்கீம், பாபிலோனின் அரசன் நெபுகாத்நேசர், நெபுகாத்நேசரின் மகன் பெல்ஷாத்சார் என்ற பாபிலோனிய அரசன், நெபோனிதாஸ் என்ற பாபிலோனிய அரசன், மேதிய அரசன் தரியு,
பெர்சிய அரசன் கோரேஷ், இந்த கோரஸின் காலத்தில்தான் அதாவது சிறைபட்டு 70 வருட முடிவில் செருபாபேல், நேகேமியா, எஸ்றா போன்றோர் விடுதலையாகி இஸ்ராயேலுக்கு வந்தார்கள். இவர்களோடு தானியேல், மொர்தெகாய், எஸ்தர் போன்றோர் இஸ்ரயேல் தேசம் திரும்பி வரவில்லை. இந்த தானியேல் பாபிலோனில் உயர் பதவிகளை பெற்றார்.
சிறைபட்டுபோனவர் உயர் பதவிக்கு வருவதற்குரிய காரணங்கள் என்ன?
1. தீட்டுப்படாமல் வாழ்ந்தார்
தானியேல் 1:5-16.
பாபிலோனில் வாழ்ந்திருந்தாலும் ராஜ போஜனங்களால் தன்னை தீட்டுபடுத்திக் கொள்ளாமல் வாழ்ந்தார்.
பாபிலோனிய உணவுகளை எடுக்காமலிருப்பதற்கு தானியேல் என்ன செய்தான்?...
இருதயத்தில் தீர்மானம் செய்துக்கொண்டான்… மன நிர்ணயம் அவசியமானது.
பொறுப்பாளர்களிடம் வேண்டிக்கொண்டான்…
தங்களை சோதித்துப்பார்க்க ஒப்புக்கொடுத்தான்.
நாமும் உணவுகளினால் நம்மை தீட்டுப்படுத்திக்கொள்ளலாகாது.
நீதி 23:1-3
ரோமர் 15:20,21.
போஜனபிரியனும், மதுபான பிரியனும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிக்கமாட்டார்கள்.
நாம் கட்டி எழுப்பப்பட உணவு கட்டுபாடு மிகவும் அவசியமானது.
2. தினம் 3 வேளை தேவனை நோக்கி ஜெபிக்கிறவனாயிருந்தார்
தேவாலயம் இல்லாததினால் தேவாலயம் இருந்த திசையை நோக்கி ஜெபிக்கிறவனாயிருந்தான்.
தானி6:10.
இதனால் இவனை இடைவிடாமல் ஆராதிக்கிறவன் என்று பெயர் சூட்டினார்கள்.
6:16.
தானியேல் எப்படியெல்லாம் கர்த்தரை நோக்கி ஜெபித்தான் என்பதை தானியேல் புத்தகத்தில் வாசித்து அறியவும்.
இவரைபோல் நாம்..
இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும்.. 1தெச5:17; கொலோ4:2.
மூப்பர்களும், ஊழியர்களும், கர்த்தரின் ஆலயத்தில் பணி செய்கிறவர்களும் தினமும் தேவனுடைய சந்நிதியில் ஜெபிக்க வேண்டும். சங்134:1.
விசுவாசிகள் வீடுகளில் தினமும் ஜெபிக்க வேண்டும்.
அப்பொழுது நாம் கட்டியெழுப்பப்படுவோம்.
3. தேவனுடைய ஆவியையுடையவனாயிருந்தார்
தானி5:11,14; 6:3.
இவனுக்குள் தேவ ஆவி இருந்தார் என்பதை ராஜா முதலாவது எல்லாரும் அறிந்திருந்தார்கள்.
ஆகையினால் இவருக்கு பயந்திருந்தார்கள்.
ஆவியானவர் பெலம் கொடுக்கிறார்.
ஆவியானவர் பரிசுத்த வாழ்வு வாழ உணர்வை தருகிறார்.
ஆவியானவர் சகலவற்றையும் அறியும் ஞானம் தருகிறார்.
ஆவியானவர் உயர்த்துகிறார்.
4. உண்மையுள்ளவனாயிருந்தார்
6:4, அவன் உண்மையுள்ளவனாயிருந்ததினால் ஒருவராலும் குற்றம் சுமத்தபடவியலாதவனாயிருந்தான்.
உண்மை என்பது வெளியரங்கமாய் – திறந்த உள்ளமுடையவர்களாய் இருத்தல் ஆகும்.
நம்மை நம்புகிறவர்களுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் வாழ்வது அவசியம். 6:22.
விவிலியம் சொல்லுவது என்னவெனில்..
உண்மையுள்ளவன் பரிபூரண ஆசீர்வாதங்கள் பெறுவான் என்பதாகும்.
நாம்….
குறைவில் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா?...
நாம் அநியாயமாய் குற்றபடுத்தப்படும்போது உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோமா?...
நாம் பலவீனத்தில் உண்மையுள்ளவர்களாயிருக்கிறோமா?...
நாம் தேவனால் கட்டியெழுப்பப்பட இந்த நான்கு காரியங்களிலும் தானியேலைபோல கவனமாயிருப்போமாக.
கர்த்தர் உங்களை கட்டியெழுப்புவாராக ஆமென்.
Comments
Post a Comment