CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

The Lord built Abraham - CCM Tamil Bible Study - கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார்


கர்த்தர் ஆபிரகாமை கட்டி எழுப்பினார்


ஆபிரகாம் என்றால் திரளான ஜாதிகளுக்கு தகப்பன். குழந்தையில்லாதவரை திரள் ஜன தகப்பனாக பெயர்சூட்டிய தேவன். முதலில் அவரின் சிந்தையில் கட்டுதலை ஏற்படுத்தினார். இது முதல் நான் மலடனல்ல, திரள் ஜனத்தின் தகப்பன் என்று சொல்லி திரிந்தார். பெயர் மாற்றம் அவசியமானது. பழைய பெயர் சாபத்தின் பெயர். புதிய பெயர் ஆசீர்வாதத்தின் பெயர். 


ஆபிரகாமின் கிரியைகளில் கட்டுதலை ஏற்படுத்தினார்.  சாராள் கற்பவதியாகும்படியாக, நின்றுபோன தாம்பத்யத்தை ஆண்டவரை நம்பி ஆபிரகாமும் சாராளும் செயல்படுத்தினர். இதன்மூலம் சாராள் கற்பவதியானாள். ஆபிரகாமின் வாழ்வில் கட்டுதலை ஏற்படுத்தினார். பிள்ளையில்லாதவனை பிள்ளையுடையவானாக்கி சந்ததிகளை பெருக செய்தார். தன் காலத்திலேயே தன் பேரப்பிள்ளைகளையும் கண்டார். 


ஆம்….பிள்ளை கொடுத்து ஆபிரகாமின் குடும்பத்தை கட்டினார்.
தேசத்தை கொடுத்து ஆபிரகாமின் வீட்டைக் கட்டினார். திரளான சம்பத்தை கொடுத்து ஆபிரகாமின் ஊழியத்தை கட்டினார். 


நாமும் ஆபிரகாமை போல கட்டப்பட என்ன செய்ய வேண்டும்?

ஆபிரகாம் செய்தது என்ன?

1. கட்டளைக்கு கீழ்படிந்தார் 

முதல் கட்டளை – ஆதி 12:1
2 ஆம் கட்டளை – ஆதி 24:6
3 ஆம் கட்டளை – ஆதி 21:12
4 ஆம் கட்டளை – ஆதி 22:2 

தனது கீழ்படிதலை….

விசுவாசத்தின் மூலம் செயல்படுத்தினார். ஆதி 22:6
வேறுபிரிக்கப்ட்டவனாயிருந்துக் கொண்டார். ஆதி 24:6
துன்மார்க்கத்தின் ஆதாயத்தை வெறுத்தார். ஆதி 14:22

2. தேவனுடைய மனிதருக்கு கொடுக்கிறவராயிருந்தார்

ஆதி 14:18-20
    முதன் முதலில் தசமபாகம் கொடுத்தவர் ஆபிரகாம். அவர் கட்டபட முக்கிய காரணம் இதுவே. பல குடும்பங்களுக்கு உதவி செய்கிறவராக, குடும்பங்களை வாழவைக்கிறவராக இருந்தார். ஆண்டவர் அவருக்கு பெலம் கொடுத்தார். ஞானம் கொடுத்தார். 

    அதை கொண்டு தான் சம்பாதித்தவைகள் யாவும் அவருக்குரியவைகள் என்பதை அறிந்திருந்தார். அவைகளில் தன் உழைப்புக்குரியவைகளை எடுத்துக்கொண்டு அவர் கொடுத்த முதலீட்டை தசமபாகங்களாக ஊழியருக்குக் கொடுத்தார். அதன் மூலம் அவருடைய வாழ்வு கட்டப்பட்டது. சம்பாத்தியம் பெருகியது.

    நாமும் தேவன் நமக்கு தந்துள்ள தாலந்துகள் திறமைகளினிமித்தம் சம்பாதித்தவைகளிலிருந்து நமக்குரியதை எடுத்துக்கொண்டு அவருக்குரிய முதலீட்டை, தசமபாகங்களாக, ஸ்தோத்திர காணிக்கைகளாக, கை காணிக்கைகளாக, பொருத்தனைகளாக, விளைபொருள்களாக அவருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் கட்டப்பட முடியும். 
நமது சம்பாத்தியம் பெருகும். 

3. தேவனுக்காய் உழைக்கிறவராகவும், தேவனை சேவிக்கிறவராகவும் இருந்தார்

        பலிபீடம் - ஆலயம் கட்டி கர்த்தரை தொழுகிறவராக இருந்தார். 
ஐந்து இடங்களில் அவர் ஆலயம் கட்டினார். ஆதி 12:7,8;13:18;21:33;22:9
ஆலயம் கட்டுதலும், ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று. தேவனுடைய பூமியில் நடந்து திரிந்தார். ஆதி13:7

    தேவனுடைய வாக்குதத்தம் பெற்றவர்களும், தேவனுடைய மனிதர்களும் கால் மிதிக்கும் தேசம் தேவனுடையது ஆகும் (யோசு1:3). தேசத்தை தேவனுக்காய் சொந்தமாக்கினார். அப்பொழுதுதான் அவருடைய வாழ்வு கட்டப்பட்டது. நாமும் ஆத்துமாக்களை தேவனுக்காய் சொந்தமாக்கி சபையை பெருகசெய்யும்போதுதான் நமது வாழ்வு கட்டப்படும். நம் சந்ததி வாழ்ந்து சுகித்திருக்கும்.

தேவனுடைய ஜனமே விவிலியத்தில் முதன்முதலாக கட்டி எழுப்பப்பட்ட ஆபிரகாமை போல இவ்வருடத்தில் நாமும் கட்டி எழுப்பப்பட ஆயத்தமாவோம் !



Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்