கட்டி எழுப்பப்பட்ட யாபேஸ்
1நாளாகமம் 4:9,10
2கொரிந்தியர் 6:3-10
மாற்கு 12:1-11
மனிதவாழ்க்கை 4 பருவங்களைக் கொண்டது
★ பிறப்பின் பருவம் அல்லது குழந்தை பருவம் இது யாவராலும் நேசிக்கப்படுகிற காலம்.
★ வாலிப பருவம் - புதிய அனுபவங்களை நாடும் பருவம்.
★ குடும்ப பருவம் - உறவுகளின் இனிமை. ஒருவரில் ஒருவர் கரிசனை காட்டும் பருவம்.
★ முதிர்ந்த பருவம் - யாவராலும் வெறுக்கப்படுகிற ஒரு பருவம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ இந்த பருவத்திற்குள் வந்துதானாக வேண்டும். பிறப்பில் நம் மலம், ஜலம் எடுத்த தாய் இப்பொழுது இல்லை. தனிமையின் காலங்கள்
இங்கு யாபேஸின் வாழ்வில் எல்லாம் நேர் எதிராக நடக்கிறது
1. துக்கத்தால் நிரம்பியவன் மகிழ்ச்சியின் மனிதனரானார்
தாய்: நான் இவனை துக்கத்தோடு பெற்றேன்.
யாபேஸ் என்றால் வருத்தம் நிறைந்தவன் என்று பொருள்.
பிறப்பே வேதனையின் பருவம்.
சங்கீதம் 51:5 - தாவீது என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்.
இதனால் தான் வருத்தம், வேதனை எல்லாம்.
ஆனால் ஆண்டவர்……சொல்லுகிறார்…..
எரே 1:5 - நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்.
எபே 1:4 - அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார்.
சங்கீதம் 71:6 - நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே.
கலா 1:15 - நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்.
ஆகையினால் அவர் எனக்கு ….
ஏசாயா 61:3 ன் படி - துயரப்பட்டவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுத்தார்.
இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
2. வெறுத்தவர்கள் மத்தியில் கனம் பெற்றவரானார்
துக்கம் நிறைந்தவன் வெறுப்புக்குள்ளானார்.
அந்நியனானார்.
சங்கீதம் 69:7,8 - 7 உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
யோபு 19:19 - என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
மாற்கு 12:3-5 - அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள்.
இந்த சூழலில் நான் ….
சங்கீதம் 22:10 ன் படி - கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே அவர் சார்பில் விழுந்தேன்.
சங்கீதம் 30:10 - கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
அவர் என்னை உயர்த்தினார்.
என் கால்களை மான்களின் கால்களை போலாக்கினார்.
உழைத்தேன், சம்பாதித்தேன்
அவரை முன்வைத்து யாவையும் செய்தேன்.
நீதி 3:9 - என் பொருளாலும், என் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணினேன்.
சங்கீதம் 30:11 - என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினார்; என் மகிமை அமர்ந்திராமல் அவரைக் கீர்த்தனம்பண்ணும்படியாக அவர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினார்.
அவர் என்னை உயர்த்தினார்.
நான் கனம் பெற்றேன்.
ஏசாயா 43:4 - நான் அவர் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றேன்; அவரும் என்னைச் சிநேகித்தார், ஆதலால் எனக்குப் பதிலாக மனுஷர்களையும், என் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுத்தார்.
3. மனிதர்களால் நிராகரிக்கப்பட்டவன் தேவனால் ஏற்றுக்கொள்லப்பட்டார். தேவனுக்கு பிரியமானவர்
தாயால், சகோதரரால், பந்து ஜனங்களால், நண்பர்களால் நிராகரிக்கப்பட்ட யாபேஸ் தேவனுக்கு பிரியமானவன் ஆனார்.
தேவனுடைய சிநேகிதன் ஆனார்.
தேவனுடைய அருள் பெற்றார்.
நீதி 12:22 ன் படி உண்மையாய் நடந்தார்.
பிறர் அவனை வெறுக்க, வெறுக்க தேவனுக்கு ஏற்றவன் ஆனார்.
நீதி 15:8 ன் படி செம்மையானவனாக இருந்தார்.
உன் 7:10 ன் படி அவருக்கு உரியவன் ஆனார்.
மனிதர் என்னை வெறுத்தாலும் அவரின் பிரியம் கிடைக்க போராடுவேன்.
ஆபேலைபோல மரணமே வந்தாலும் போராடுவேன்.
அன்பானவர்களே இவ்வித மனோபாவத்தில் வாழ்ந்ததினால்தான் யாபேஸ் கட்டியெழுப்பட்டார்.
நாமும் யாபேஸைபோல வாழ பிரயாச படுவோம்.
கட்டியெழுப்பப்படுவோம்.
ஆமென்.
Comments
Post a Comment