CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்

கட்டி எழுப்பப்பட்ட பவுல்

    சவுல் - விரும்பபட்டவன். இது எபிரேய பெயர். பவுல் - சிறுமை - சிறிய. லத்தீன் மொழி தொடர்புடைய கிரேக்க பெயர். இஸ்ராயேலனாயிருந்தாலும் உரோம குடியுரிமை பெற்றவர். தர்சு பட்டணத்து இஸ்ராயேலன். பென்யமீன் கோத்திரத்தான். யூதன், பரிசேயன். எருசலேமில் கமாலியேலின் பாதத்தில் ரபீக்களுக்குரிய கல்வி கற்றவன்.

இப்படிபட்ட பவுலின் வாழ்வில் இருவித கட்டுதல்கள் நடந்தேறின


1. பவுல் தனக்குதானே கட்டியெழுப்பப்பட்டவர்

✔அதாவது யூத சமயத்தால் கட்டியெழுப்பப்பட்டவர். 
2கொரிந்தியர் 11:22 

✔செல்வத்தினால் கட்டியெழுப்பட்டார். 

✔கல்வியறிவினால் கட்டியெழுப்பப்பட்டார். அப்26:24; 2கொரி11:6
விவிலிய அறிவு உள்ளவர். 

✔சமய வைராக்கியத்தினால் கட்டியெழுப்பப்பட்டவர். அப்21:20; 22:3; ரோம10:2

✔குல பெருமையினால் கட்டியெழுப்பப்பட்டவர். 2கொரி11:22

    இவ்வளவு மேன்மை, புகழ் இருந்தும் இயேசு கிறிஸ்துவின் சிறிய ஒளியின் முன்பாக இந்த கட்டபடுதல் யாவும் உடைந்து விழுந்தன, எல்லாம் இடிக்கப்பட்டுப் போயிற்று. பைத்தியகாரனாக மாறினார். 

ஆனால்…..


2. பவுல் இயேசு கிறிஸ்துவால் கட்டியெழுப்பப்பட்டார்

அப் 9:15,16;13:1-3
இந்த பவுல் தேவனுடைய ஒளியால் சந்திக்கப்பட்டபோது ஜெபிக்கிறவராக மாறினார். 

அப் 9:11; ரோம1:9;15:32;கொலோ1:9
பின்னாட்களில் சபையாரை ஜெபிக்க தூண்டினார். 

தரிசனம் காண்கிறவரானார். 
அப் 9:12. 2கொரி12:1
இந்த தரிசனமே அவரை இடறாமல் பாதுகாத்தது. 

ஆவியினால் நிரப்பப்பட்டார். 
1கொரி7:40;அப்18:5
இந்த ஆவியினால் நிறைந்து எல்லா இடங்களிலும் பேசினார்.

அதிகமான அறிவடையும்படியாக எல்லாவற்றையும் விட்டுவிட்டார். 
பிலி 3:7,8 
இந்த அறிவை எல்லாராலும் புரிந்துகொள்ள இயலவில்லை. 2பேது3:15,16


3. தேவனால் கட்டியெழுப்ப்ப்பட்டபோது பவுல் எப்படிப்பட்டவராக மாறினார்?

அதிக பிரசங்கியாயிருந்தார் 
1தீமோ2:7; ரோம15:19

அதிகமான சபைகளை ஸ்தாபித்தார்
அப்15:41

அதிகமான நூல்களை எழுதினார்
கலா6:11

நீதியின் கிரீடத்துக்கு சொந்தமானார்
2தீமோ4:8

    நாம் நம் பழைய சுபாவங்களினால் கட்டப்பட்டுள்ள நிலையிலே தொடர்ந்தால் நமது பணம், படிப்பு, குலபெருமை, ஜாதி பெருமை அடிப்படையில் கட்டப்பட்டிருந்தால் அவர் அதை இடித்துப்போடுவார். 

    நாம் அவரால் கட்டப்படுவோமானால்… 
ஜெபத்தில், தியானத்தில், பிரசங்கிப்பதில், தெய்வ சுபாவங்களில் தேறுவோம். அதை ஒருவரும் இடித்துபோட முடியாது. 

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது