ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது
ஆதியாகமம் 25:19-26
கலாத்தியர் 4:23-31
மத்தேயு 8:5-13
★ ஈசாக்கு என்றால் நகைப்பு என்று பொருள்.
★ ஆபிரகாமின் 100 வயதில் பிறந்தவன்.
★ வாக்குதத்தத்தின்படி பிறந்தவன்.
★ 40 வயதில் மாமா மகள் ரெபேக்காளை திருமணம் செய்தார்.
★ 60 வயதில் ஏசா, யாக்கோபு என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தான்.
★ ஒரே மனைவியையுடையவனாயிருந்தான்.
★ தனது 180 ஆம் வயதில் மரித்துப்போனான்.
★ ஆதி முற்பிதாக்களில் ஒருவராக அறியப்படுகின்றார்.
★ ஈசாக்கு இயேசுவுக்கு ஒப்பிடப்படுகிறார்.
★ ஈசாக்கு பலி செலுத்தப்பட்டு மீட்கப்பட்டான்.
★ இயேசு கிறிஸ்து பலி செலுத்தப்பட்டு உலகிற்கு மீட்பை உண்டு பண்ணினார்.
இந்த ஈசாக்கு பிள்ளைபாக்கியம் இல்லாமலிருந்து இரு பிள்ளைகளை பெற்றெடுக்க காரணம் என்ன?
ஈசாக்கின் குடும்ப விருத்தி கட்டியெழுப்பப்பட காரணம் என்ன?
1. ஈசாக்கின் பிறப்பு தேவனால் உண்டானது
ஆதி 17:19 - அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
• ஈசாக்கு வாக்குதத்தத்தினால் பிறந்தவன்.
கலா4:28.
• ஈசாக்கு வாக்களிக்கப்பட்டு பிறந்தவன்.
• ஈசாக்கு விருத்தசேதனத்தினால் பிறந்தவன். 17:9-14.
• சுயாதீனத்தினால் பிறந்தவன்.
கலா4:23.
• தேவனுடைய இருதயத்திலிருந்து பிறந்தவன்.
• தேவனுடைய ஆவியினால் பிறந்தவன்..
ஆகையினால்தான் மலட்டு குடும்பத்தில் ஈசாக்கு வம்ச விருத்தி பண்ணுகிறவனாயிருந்தான்..
நமது குடும்பம் விருத்தியடைய நமது பிறப்பு அவசியமானதாகும்.
நமக்கு புது பிறப்பு அவசியமாகின்றது. யோவான் 3:3
நமக்கு புது நாமம் அவசியமாகின்றது. ஏசாயா 63:2.
பழைய பிறப்பும், பழைய பெயரும் சாபத்தை வருவிக்கும்..
புதிய பிறப்பும், புதிய நாமமும் ஆசீர்வாதத்தைப் பிறப்பிக்கும்.
விசுவாசிகள் ஞானஸ்நானம் பெற்று ஊழியகாரனால் பெயர் வைக்கப்பட வேண்டும்.
அந்த பெயரை மாற்றவே கூடாது.
அங்குதான் ஆசீர்வாதம் ஆரம்பமாகும்.
அப்பொழுது நமது குடும்பம் கட்டியெழுப்பப்படும்.
2. ஈசாக்கு தேவ மனிதனாகிய தன் தகப்பனுக்கு எல்லாவிதத்திலும் கீழ்படிந்து வாழ்ந்தான்
ஆதி 22:2 - உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கு.
தகப்பனின்.
நேசம் உண்டாக காரணம் கீழ்படிதல்.
பிதாவின் சித்தம் செய்த இயேசுவை போல..
யோவான் 4:34.
ஈசாக்கு எல்லாவிதத்திலும் கீழ்படிந்து வாழ்ந்ததினால் தான் தகப்பனின் நேசம் உண்டானது.
தகப்பன் தவறு (பலதாரம்) செய்த போதிலும் எதிர்த்து நிற்கவில்லை.
தகப்பன் தன்னை கொல்ல கொண்டுபோகிறபோதும் எதிர்த்து நிற்காதவனாயிருந்தான்.
இந்த கீழ்படிதல்தான் தன்னுடைய சாபகட்டை உடைக்க ஈசாக்குக்கு பெரிய உதவியாயிருந்தது.
ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படிந்தார். 26:4.
தேவ ஊழியனுக்கு கீழ்படிந்தார். 14:18.
அதுபோலவே ஈசாக்கும் கீழ்படிதலில் வளர்ந்தார்.
நாமும் அதுபோல வாழ்ந்தால் நமது குடும்பமும் கட்டியெழுப்பப்பட முடியும்.
நமது குடும்பம் விருத்தியடைய நாம் செவிகொடுக்கிறவர்களாகவும், கீழ்படிகிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
உபா28:1,2.
இரட்சிக்கப்பட்ட ஒருவருக்கு மூன்று பேர் தகப்பன் ஸ்தானத்திலும், ஆசீர்வதிக்கும் ஸ்தானத்திலும் இருக்கிறார்கள்.
இரட்சிக்கப்பட்டு தேவனுக்கும், போதகருக்கும் கீழ்படியும் தகப்பன்..
நல்ல நற்குணங்களுடைய தன் சொந்த சபையின் போதகர்..
எல்லாருக்கும் தகப்பனாகிய தேவன்.
நமது குடும்பம் விருத்தியடைய கீழ்படிதல் அவசியமானது.
3. ஈசாக்கு வேண்டுதல் செய்கிறவனாயிருந்தான்
ஆதி 25:21 - ஈசாக்கு மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
ஈசாக்கு இவ்விதம் செய்வதை அன்றாட வழக்கமாக கொண்டிருந்தார்.
ஆதி 24:63 - ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான்.
மலடு என்பது ஒரு வியாதி.
வியாதி சாபத்தின் விளைவு.
மலடு என்பது ஒரு சாபம்.
இது பரம்பரை பாவத்தினாலும் வரும், சொந்த பாவத்தினாலும் வரும்.
புருஷனுடைய கீழ்படியாமையினாலும் வரும்..
ஆபிரகாமின் குடும்பத்தில் இந்த மலடு இருந்தது..
இந்த மலடை போக்க ஆபிரகாம் தொழுகை செய்தார்…
அவருடைய மகன் ஈசாக்கு வேண்டுதல் செய்தார்..
ஈசாக்கு எப்படிப்பட்ட வேண்டுதல் செய்தார்?
• காலையிலிருந்து மாலைவரை தேவன் முன்னிலையில் பதில் வருவது வரையிலும் விழுந்து கிடந்தார்…
• மன்றாட்டின் வேண்டுதலை செய்தார். ரெபேக்காள் விருத்தசேதனத்தினால் பிறந்தவளல்ல, ஆகவே அவளுக்காக வேண்டுதல் செய்தான்.
சாபமாகிய மலட்டு ஆவியை கடிந்துக்கொண்டு ஜெபித்தான்…
இன்று நம்மில் 2 விதமான சாபம் உண்டு…
ஆசீர்வாத விருத்தியின்மை…
வம்ச விருத்தியின்மை…
இவைகளை கொண்டிருக்கும் நாம் எப்படிப்பட்ட ஜெபம் ஏறெடுக்கிறோம்?
நமது ஜெபங்கள் அருவருப்புகளால் நிரம்பியுள்ளது.
நீதி 28:9 – ல் வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
சங்கீதம் 66:18 - ல் என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
ஆம்.. நாம்…
தேவனுக்கு பயந்த தகப்பனுக்கு விரோதமான பாவம்…
சொந்த போதகருக்கு விரோதமான பாவம்..
தேவனுக்கு விரோதமான பாவம்
இவைகளை செய்துகொண்டு ஜெபிக்காது நீதி 28:7 ன் படி வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிற விவேகமுள்ள புத்திரனாயிருந்து ஜெபிப்போம்.
யாக்கோபு 5:16 ன் படி - நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் மிகவும் பலனுள்ளதாயுள்ளது.
ஜெபத்தினால் சாப கட்டை உடைக்க முடியும்.
ஈசாக்கு வேண்டுதல் செய்து சாப கட்டை உடைத்தான்
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தான்.
நாமும் இப்படிபட்டவர்களாயிருந்து இரட்டை ஆசீர்வாதங்களை பெற்றெடுத்து நமது குடும்பத்தை கட்டியெழுப்புவோமாக.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Comments
Post a Comment