CCM Tamil Bible Study - வயிற்றை கசப்பாக்கும் புஸ்தகம்
- Get link
- X
- Other Apps
வெளி 10:9. அதற்கு அவன் : நீ இதை வாங்கி புசி; இது உன் வயிற்றுக்கு கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனை போல மதுரமாயிருக்கும் என்றான். யோபு23:12;எரே15:16;எசே2:8;3:1-3,14.
வயிற்றை கசப்பாக்கும் புஸ்தகம்
தூதன் சொல்லுகிறார் - இதை வாங்கி பூசி. இது உன் வயிற்றுக்கு கசப்பாய் இருக்கும். அதன்படியே யோவான் அதை வாங்கி புசித்தார். யோவானின் வயிறு கசப்பாயிற்று. தேவனுடைய வார்த்தைகள் பாலாகவும், கடின உணவாகவும் விவிலியத்தில் உவமிக்கப்பட்டுள்ளது. வயிற்றை கசப்பாக்கும் வார்த்தைகள் என்பது கடின உணவை குறிக்கின்றது. இதன் அடிப்படையில் நாம் ஒரு சில உண்மைகளை அறிவது நல்லது.
முதலாவது கர்த்தருடைய வார்த்தையானது அதை ஏற்றுக் கொள்கிறவனில் கிரியைச் செய்து புடமிடும் காரியத்தை செய்யும். சங் 105:19. புடமிடுதல் என்பது வசனத்திற்கு ஏற்றவனாக அவனை மாற்றும் என்பதாகும். உருமாற்றம் நிகழாவிட்டால் உருவாக்கும் பணியை செய்ய முடியாது. சரியாக புடமிடப்படாத தேவ மனிதர்களின் பெருக்கம் அதிகமானதினால் கிறிஸ்துவின் சபையாகிய மனையாட்டிக்குள் யூதாசுகளும், அனனியா சப்பிராக்களும், பிரபஞ்சத்தின் மேல் ஆசை கொண்ட தேமாக்களும், நாகம்மாள் பின்னால் ஓடின பேயாசிகளும், தங்கள் தேவனே வயிறு என்று சொல்லிக் கொள்பவர்களும் எழும்பி சபையை தீட்டுப்படுத்துகிறார்கள்.
இரண்டாவது கர்த்தருடைய வார்த்தை ஒருவருக்குக் கொடுக்கப்பட்டதானால் அது செய்ய வேண்டிய வேலையை செய்துவிட்டு கொடுத்தவரிடமே திரும்பி போகும். கர்த்தரின் வார்த்தையானது ஒன்றில் நற்கிரியைகளை உருவாக்கி நித்திய வாழ்வுக்குள் வழி நடத்தும். இல்லையெனில் உருவாக்கி கேட்டுக்குள் தள்ளிவிடும். மேலும் கர்த்தருடைய வார்த்தையானது ஜீவனையும் உருவாக்கும். அழிவையும் உருவாக்கும். இருபுறமும் கருக்கானதாக இருக்கும்.
மூன்றாவது கர்த்தருடைய வசனம் தேவனிடமிருந்து வந்ததினால் அது எவருக்குள் அமைந்திருக்கிறதோ அவர்களை தேவனுடைய சாயலுக்கும் தேவனுடைய மகிமைக்கும் ஏற்றதாக மாற்றும். கசப்பு மருந்து வியாதியஸ்தர்களை குணமாக்கி சுகம் தரும் நல்மருந்தாக செயல்படுவது போல கர்த்தருடைய வசனம் கசப்பை உருவாக்குகிறதாக இருந்தாலும் ஆரோக்கியத்தையும், நீண்ட வாழ்வையும் உண்டாக்கும்.
நான்காவதாக கர்த்தருடைய வசனம் ஒருவருக்குள் பலிதம் ஆகிவிட்டதானால் கிறிஸ்துவை போல பரிகார சாட்சிகளாக மாற்றும். பார்க்கிறவர்களுக்கு கசப்பாய் இருக்கும். அவனுக்கு மதுரமாய் இருக்கும். சரீரத்தில் கசப்பாக இருக்கும். ஆன்மாவிலோ மதுரம் உண்டாகும்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16,17
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment