CCM Tamil Bible Study - வாங்கிக் கொள்
- Get link
- X
- Other Apps
வெளி 10:8. நான் வானத்திலிருந்து பிறக்க கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல.. வெளி10:2;எசே2:9;சக5:1;வெளி5:1;21:3.
வாங்கிக் கொள்
சிறு புத்தகம் என்ற சொல் இவ்வதிகாரத்தில் மட்டும்தான் வருகின்றது. கையில் இருந்த புத்தகம், சிறு புத்தகம், திறக்கப்பட்ட புத்தகம் என்று இதனை குறித்து சொல்லப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை தூதனுடைய கையிலிருந்து வாங்கிக் கொள்ளும்படி யோவானுக்கு வானத்திலிருந்து கட்டளை பிறக்கின்றது. எதற்காக வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அடுத்த வசனத்தில் காண்கின்றோம். நாம் இவ்விடத்தில் விவிலியத்தின் மூன்று விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். தேவனிடமிருந்து கொடுக்கப்பட்ட புத்தகம் அல்லது வார்த்தை. இரண்டாவது இயேசு கிறிஸ்துவிடமிருந்து கொடுக்கப்பட்ட வார்த்தைகள். மூன்றாவது தூதனிடமிருந்து கொடுக்கப்பட்ட புத்தகம் அல்லது வார்த்தை. இவ்விடத்தில் யோவானுக்கு கொடுக்கப்பட்ட புத்தகத்தை குறித்த விஷயங்களை கவனிப்போம்.
தேவனுடைய மனிதர்கள் தேவனிடமிருந்தோ, தேவதூதர்களிடமிருந்தோ, பரிசுத்த ஆவியனிடமிருந்தோ தேவ வசனங்களை பெற்றுக் கொள்ளாமல் தேவனையும் தேவனுடைய காரியங்களையும் பிரசங்கிக்கவும் முடியாது எழுதவும் முடியாது. அதேபோல தேவனுடைய புஸ்தகத்தை தேவனாலோ, தூதர்களாலோ, பரிசுத்த ஆவியானாலோ விளக்கி தராமல் புரிந்து கொள்ளவும் முடியாது. தேவனுடைய கிருபையின் பனித்துளியை பெற்றுக் கொள்ளாத எந்த இருதயமும் தேவனுடையவைகளை அறிந்து கொள்ள முடியாது.
விவிலியம் தேவனுடைய ஜனங்களுக்கான அன்றாட வாழ்வியல் புத்தகம். நாட்டை ஆளுகிறவர்களும் சமுதாய சிற்பிகளும் தேவனுடைய மக்களாக இருப்பார்கள் என்றால் விவிலியத்தின் அடிச்சுவடுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். கிறிஸ்தவ நாடுகளாகவும் கிறிஸ்தவ கிராமங்களாகவும் கிறிஸ்தவ வீடுகளாகவும் இருக்கும் என்றால் விவிலியத்தின் அடிச்சுவடியில் இருந்து எள்ளளவும் விலகிப் போகலாகாது.
யோவானிடம் புத்தகத்தை வாங்கிக்கொள் என்றது போல ஆதியிலேயே தங்கள் தங்களுக்கென்று பிரமாணங்களை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது. நீதிமொழிகள் சார்ந்த தீர்க்கதரிசிகள் இருதயமாகிய பலகையில் கர்த்தரின் வசனங்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று போதித்தார்கள். வீட்டு நிலை கால்களிலும் சுவர்களிலும் வார்த்தைகள் பொறிக்கப்பட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டது. இதனை மையமாகக் கொண்டு பாறைகளிலும் மற்றும் பல இடங்களிலும் வசனங்களை பொறித்தார்கள்.
சத்தியத்தை வாங்கு. அதை விற்காதே. இலவசமாய் இருதயத்தில் வாங்கிக் கொண்டதை இலவசமாகவே இருதயங்களுக்குள் அனுப்புங்கள். உழைப்பின் கூலியை அவர் தருவார். கர்த்தரின் வார்த்தைகளை வாங்கி இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். கடைசி காலத்துக்கு பயன்படும்.
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா
சங்கீதம் 149:8,9
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment