CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஆணையிட்டான்

வெளி 10:7c. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிட்டான். மத்5:33-37;எபி6:13-16;யாக்5:12;சங்15:4. 

ஆணையிட்டான்

ஆணையிடுதல் என்பது தான் சொல்வதை உறுதிப்படுத்தும்படியும், யாருடைய செய்தியை சொல்கிறோமோ அவர்கள் பேரில் அதை உறுதிப்படுத்துவதும் ஆகும். ஏழாம் தூதன் தனது உரையை தேவனின் உரையாக பிரகடனப்படுத்தும்படியாக தேவன் பேரில் ஆணையிட்டான். என்றென்றும் உயிரோடிருக்கிறவர் பெயரில் ஆணையிட்டதினால் இடப்பட்ட ஆணையும், உரையும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதாகும். 

விவிலியத்தில் ஆணையிடுதல் குறித்த ஒழுங்குமுறைகள் தரப்பட்டுள்ளன. ஆணையிடுதல் என்பது உடன்படிக்கைக்கும் சத்தியத்துக்கும் இணையானது ஆகும். ஆணையிட்ட பின்பு அதன்படி நடவாததினால் தான் பல இடங்களில் தேவகோபம் பற்றியெரிந்ததை இஸ்ரயேலருடைய சரித்திரத்தில் நாம் காண்கின்றோம். மனிதர்கள் தங்கள் ஆணையின்படி நடந்தார்களோ இல்லையோ தேவன் தமது ஆணையின்படியே அனைத்தையும் நடத்தினார் - நடத்தியும் வருகிறார். அவருடைய ராஜ்யத்தின் ஜீவராசிகள் யாவும் அவரைப்போலவே ஆணையிட்டு அவரைப் போலவே ஆணைக்கு ஏற்ப நடந்தார்கள். தள்ளப்பட்ட சாத்தானும் அவனது கூட்டமும் தங்கள் ஆணையின்படி நடவாததினால் தான் ராஜ்யத்தினின்று விலக்கப்பட்டார்கள். 

ஆண்டவருடைய ஜனமும் அவரின் ஊழியக்காரர்களும் மூன்று விதமான ஆணைக்கு உட்பட்டுள்ளார்கள். தேவனிடம் கொடுத்த ஆணை, தேவ சமூகத்திலே இடபட்ட ஆணை, இவ்வுலகத்தில் கொடுத்த ஆணை என்பதாகும். நமது ஆணைகளில் உண்மையில்லாதவர்களாய் விலகிப் போவோமென்றால் சத்தியத்திற்கு எதிராகவும், தேவனுடைய ஜீவனுக்கு எதிராகவும் செயல்படுகிறவர்களாவோம். மட்டுமல்ல சாத்தானின் கூட்டாளிகளாகவும் மாறுவோம். 

ஆணையிட்டு உறுதிப்படுத்தி வாழ். அதை விட்டு விலகாதே. 


யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 

அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 

சங்கீதம் 24:3-5

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்