CCM Tamil Bible Study - என்றும் வாழ்பவர்
- Get link
- X
- Other Apps
வெளி 10:7b. சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர். உபா32:40.
என்றும் வாழ்பவர்
விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ள எல்லா நாமங்களிலும் இந்த நாமமே மிகவும் உயர்ந்த நாமமும் பயபக்திக்குரியதும் ஆகும். ஆதி தந்தையர்கள் யெகோவா தேவனை உயிரோடிருக்கிற தெய்வமாக கண்டும், அறிந்தும், அனுபவித்தும் இருந்ததினால் தான் முழு நம்பிக்கை வைத்தார்கள். அவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்தார்கள். ஆண்டவரை என்றென்றும் உயிரோடிருக்கிறவராக எவரொருவர் ஏற்கவில்லையோ அன்னவர் அவிசுவாசியாகவும், தேவனை நம்பாமல் விலகிப் போன சாத்தானின் உடனாளியாகவும் இருக்கின்றான் என்றே பொருளாகும். உயிரோடிருக்கும் தேவனை கண்டும், அவரோடு இருந்து அறிந்தும், அவருக்கு மரணமே இல்லையென்று தெரிந்தும் அவரை விட்டு விலகும் படியாக எத்தனித்த சாத்தானின் செயல்களை செய்கின்ற ஒவ்வொருவரும் அவனுக்கென்று தீர்மானிக்கப்பட்டுள்ள தீர்ப்பே உண்டாகும்.
தேவனைத் தவிர பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளும், மனிதர்களும் என்றென்றும் வாழ்ந்திருக்கமாட்டாது என்று தெரிந்திருந்தும் அவைகளையே - மனிதர்களையே தெய்வங்களாக்கி பூஜிக்கின்ற சாத்தானியர்கள். பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் எப்பொழுது வேண்டுமானாலும் மரணிக்க காத்திருக்கும் மனிதர்களை அப்பா தெய்வம் அம்மா தெய்வம் என்று கூச்சலிடும் புத்தி எப்படி வந்தது?
பேசமாட்டாத ஊமை தெய்வங்கள் தங்களின் வாழ்வியலையே நிலைநிறுத்திக் கொள்ள இயலாதபடிக்கு பாதாளத்தில் தள்ளப்பட்டிருக்க மனிதர்கள் தங்களை வணங்கும்படியும், வணங்கினால் முக்திபேறு கிடைக்கும் என்றும் பொய்யின் மதங்களை பின்பற்றி போகும் மனிதர்களை என்னவென்று சொல்வது?
என்றும் வாழ்ந்திருப்பவரின் ஆளுகை வரப்போகிறது... அழிவு வரப்போகிறது...
எச்சரிக்கை...
எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப் போகப்பண்ணுவேன், யுத்த வில்லும் இல்லாமற்போகும். அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார். அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும்,நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தமும் செல்லும்.
சகரியா 9:10
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment