CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - சிருஷ்டித்த தேவன்

வெளி10:7a. வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவர். ரோம1:25;1கொரி11:9;எபே2:15,10;3:11;4;24;கொலோ1:16;3:10;வெளி4:11. 

சிருஷ்டித்த தேவன்

சிருஷ்டித்தல் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 16 தடவைகள் வந்துள்ளது. இச்சொல் குடியிருக்க தக்க, படைப்பு, வடிவமைத்தல், முழுமையாக மாற்றியமைத்தல் என பொருள்படும். ஏழாம் தூதன் சிருஷ்டித்த தேவன் பேரில் ஆணையிடுவதற்காக தேவனின் படைத்தலை குறித்து குறிப்பிடுகின்றான். 

தேவன் இவ்வுலகில் மூன்று அமைப்புகளை சிருஷ்டித்திருக்கின்றார். இவ்வுலகம் இம்மூன்று அமைப்புகளினால் சூழப்பட்டுள்ளது. 

முதலாவது வானமும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார். இரண்டாவது பூமியையும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார். மூன்றாவது சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகள் யாவையும் படைத்துள்ளார் என்று அறிக்கையிட்டு கூறுகின்றார். இந்த மூன்றுமே மனுக்குலம் அன்றாடம் பார்ப்பதும், அனுபவிப்பதுமாகும். உயிர் வாழும் மனிதன் வானத்தினால் வெளிச்சம் மழை ஆகியவற்றை பெறுகின்றான். பூமி செழிப்படைகிறது. சமுத்திரத்தினால் நல்ல சீதோஷ்ண நிலையை பெறுகின்றான். பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவன ஆகிய உயிரினங்களோடும் மனிதன் இந்த பூமியில் இணைந்து வாழ்கின்றான். 

இந்த மூன்று அமைப்பையும் உண்டாக்கினவர் அவரே. வானம் பூமி தேவனால் படைக்கப்பட்டது. ஆனால் அவைகளில் உள்ளவைகளை ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவதற்கு தேவன் காலங்களை எடுத்துக் கொண்டார். ஆதியில் வானம், பூமி, தண்ணீர், காற்று ஆகிய நான்கை சிருஷ்டித்தார். நெருப்பை -  வெளிச்சத்தை பின்னர் சிருஷ்டித்தார். இந்த ஐந்தைக் கொண்டு தான் தேவன் அனைத்தையும் உண்டாகினார். காற்றைக் கொண்டும், நீரைக் கொண்டும், மண்ணைக் கொண்டும், நெருப்பைக் கொண்டும் ஜீவராசிகளையும் இயற்கையையும் உருவாக்கினார். ஒன்றும் தானாக உருவாகவில்லை. இயற்கையின் அம்சங்கள் யாவும் தேவனின் படைப்புகளே. இயற்கை சமயம் என்ற ஒன்று கிடையாது. இயற்கை வழிபாடு தேவனுக்கு எதிரானது. இயற்கையை வழிபட முயற்சிக்கின்ற மனிதன் அதினிமித்தம் தேவனிடமிருந்து சாபத்தையே பலனாக பெறுகின்றான்.  ஆகையினால் தான் வாழும்படியாக பயன்படும் இயற்கையானது உயிரினங்கள் மாளும் படியாக பெலம் கொள்ளுகின்றது. 

"படைக்கப்பட்டவைகளை கொண்டு படைத்தவரை பார்க்கும் கண்களை இழந்து போன மனிதன்"


தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத்தொழுது சேவியாமல் சிருஷ்டியைத்தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 

ரோமர் 1:25.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்