CCM Tamil Bible Study - குதிரை போன்ற வெட்டுக்கிளி
- Get link
- X
- Other Apps
வெளி 9:7a. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது.
2இரா5:9;6:17;23:11;சங்20:7;33:17;147:10;நீதி21:31;எரே4:13;எசே26:7..
குதிரை போன்ற வெட்டுக்கிளி
குதிரை வேகத்துக்கும், அஞ்சாமைக்கும், யுத்தப் பணிகளுக்கும், பலத்துக்கும் உவமிக்கப்படுகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் குதிரை போல் காணப்பட்டன. தோற்றத்திலும் செயலிலும் குதிரைகளுக்கு ஒத்திருந்தது. யுத்தம் செய்வதற்கும், சாவதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் அஞ்சாதிருத்தல் ஆகும். கடைசி காலங்களில் மக்களில் பலர் இந்த வெட்டுக்கிளிகளை போல காணப்படுவர். இரக்கம் இல்லாதவர்களாக, மனசாட்சி இல்லாதவர்களாக, மனிதாபிமானம் இல்லாதவர்களாக, எதையும் பேசவும் செய்யவும் துணிகரம் உள்ளவர்களாக இருப்பர். கடைசி காலங்களில் மனுஷர் எப்படி இருப்பார்கள் என்று 2தீமத்தேயு3:1-9 ல் பவுல் கூறுகின்றார். உடனாளியை நினைவு கூர மாட்டார்கள். உறவுக்காரர்களை நினைத்தே பார்க்க மாட்டார்கள். மூத்தோரை மதிக்கவே மாட்டார்கள். இத்தகைய குணங்கள் இக்காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பதை நாம் காண்கின்றோம். கொரோனா காலத்திற்கு பின்பு மனிதர்கள் மரணம் குறித்த பயம் அற்றவர்களாகவும், கடவுளை குறித்த நினைவில்லாதவர்களாகவும், தங்களை வளர்த்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யும் அறிவு படைத்தவர்களாகவும் உள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளின் தோற்றத்தையும் ஆற்றலையும் செயல்களையும் காணும் மனிதர்கள் பாதி உயிர் போனவர்களைப் போல காணப்படுவார்கள். எவரோடும் சண்டை பண்ணும். அவைகளுக்கு மரியாதை கொடுக்கவும் தெரியாது. விலகிப் போகவும் தெரியாது. யுத்தத்திற்கு புறப்பட்ட குதிரைகளை போல கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும். சமீப காலங்களில் கூட்டம் கூட்டமாக வந்து சபைகளை தாக்கும் கும்பல்கள் யாவும் இந்த வெட்டுக்களிகளின் ஆவி கொண்டவைகள் என்று கூறுவதில் தவறில்லை.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment