CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - வேதனையின் உச்சம்

வெளி 9:5c. அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரை கொட்டும் போது உண்டாகும் வேதனையைப் போல் இருக்கும். எசே2:6;சக14:12;சங்69:20;நீதி23:29;ஏசா26:7;எரே4:19;மத்24:8;மாற்13:8;1தீமோ6:10;1யோவா4:18

வேதனையின் உச்சம் 

பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பது போல ஐந்து மாதங்களும் தொடர் துன்புறுத்தல் தொடரும். கைதியை சிறைக்குள் வைத்து துன்புறுத்துவது போல இந்த வெட்டுக்கிளிகள் மனிதர்களை துன்புறுத்தும். எதற்காக துன்புறுத்துகின்றன என்றோ எப்படி துன்புறுத்துகின்றது என்றோ கொடுக்கப்படவில்லை. புதர்களுக்குள் நடந்தால் எப்பொழுது பூச்சிகள் தீண்டுகிறது என்று தெரியாதது போல இயல்பாகவே எல்லாரையும் இவைகள் துன்புறுத்திக் கொண்டே இருக்கும். வெளியில் நடமாட முடியாதபடிக்கு இவைகளின் நடவடிக்கைகள் காணப்படும். திடீரென்று தாக்குதல், காயம் உண்டாக தாக்குதல் போன்ற வேலை செய்யும். கடைசி காலங்களில் உண்டாகும் வேதனைகளில் இவைகள் முந்தியதாகவுள்ளது. 

வேதனை என்பது பாவத்தின் விளைவாகும். வேதனையோடு பிள்ளை பெறுவதும், வலிபட்டு பயிரின் வெள்ளாமையை பெற முயற்சிப்பதும் பாவத்தினால் உண்டான வேதனைகளின் பலனேயாகும். பாவம் இல்லாத காலத்தில் வேதனைப்படுத்துவது என்பது இல்லாதிருந்தது. எல்லாம் சீராக ஒன்று போல் இயங்கும் போது குழப்பங்கள் உண்டாவது இல்லை. சீர்கெட்டு அவை அவை தன்னிஷ்டம் போல இயங்கும் போது குழப்பம் உண்டாகி ஒன்றுக்கொன்று மோதல் உண்டாகும். ஒரே குடும்பத்தில் ஐந்து பேர்களும் ஒன்று போல் செயல்படுவதில்லை. இவ்விதமான அணுகுமுறை யாவும் சீர்கேடுகளின் பிரதிபலன். சீர்கேடுகள் மிகுதியாகும் போது வேதனைகள் உண்டாகும். பிள்ளைகள் பெற்றோரை வேதனைப்படுத்துவர். சகோதரர் சகோதரரை வேதனைப்படுத்துவர். விஷப்பூச்சிகளின் தீண்டுதலும் பாவத்தின் விளைவே ஆகும். அத்தகைய பூச்சிகளின் விஷம் பிறரை கொல்வதற்காக கொடுக்கப்பட்டது அல்ல, அவைகள் வாழ்வதற்காக கொடுக்கப்பட்டது. அவைகள் பயமுறுத்தப்பட்ட போது தாக்குதல் தொடுக்கும் உணர்வை பெற்று பிறரை வேதனைப்படுத்துகின்றது. மனிதர்களும் இவ்விதமே. கோபம் கொண்டிராத மனிதன் பாவத்தினால் உணர்வுகளுக்குள் உணர்ச்சிகள் எழும்பி முரண்பட்டு எரிச்சல், கோபம், மூர்க்கம் போன்றவைகளை பிறப்பித்து வேதனைகளை உண்டாக்குகிறது. இவைகளுக்கு முடிவு உண்டு. கிறிஸ்துவால் மீட்கப்படும் போதும் முடிவு உண்டு. இப்பூமியின் அழிவின் போதும் நிரந்தர முடிவுண்டாகி புதிய பூமியில் அன்பு மலரும்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்