CCM Tamil Bible Study - ஏழு கொம்புகள் ஏழு கண்கள்
- Get link
- X
- Other Apps
வெளி 5:6b. அது 7 கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாய் இருந்தது. அந்த கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற ஏழஆவிகளேயாம்.
1சாமு2:10; தானி7:14; மீகா4:13; ஆப3:4; லுக்1:69;பிலி2:9-11; வெளி4:5.
ஏழு கொம்புகள் ஏழு கண்கள்
அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற ஆட்டுக்குட்டியானது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. ரத்தத்தோடு பரலோகத்தில் வரவில்லை. இரத்தம் சிந்தப்பட்ட காயத்தோடு காணப்பட்டது. ஏழு கொம்புகளும் ஆட்டுக்குட்டியின் வல்லமையின் பூரணத்துவத்தை குறிக்கின்றது. எல்லா மனுக்குலத்தையும் அடக்கியாளும் வலிமை கொண்ட மரணத்தினால் கூட இந்த ஆட்டுக்குட்டியை ஜெயிக்க முடியவில்லை. அத்தகைய ஆற்றலும் மகத்துவமும் உடையதாய் இருக்கிறது. மேலும் இந்தக் கொம்புகள் ஆட்டுக்குட்டியின் மகிமை பிரதாபத்தையும் மாட்சிமையும் குறிக்கின்றது. இந்த ஆட்டுக்குட்டியின் மகிமை பிரஸ்தாபத்திற்கு முன்பாக உலகத்தின் எந்த ஜீவனுகளும் நிற்க முடியாது. மேலும் பத்து கொம்புகளோடு ஏறி வரப்போகும் மிருகத்திற்கு சவால் விடுவதாகவும், அதனை ஜெயிக்கிறதாகவும் இருக்கிறது. இந்தக் கொம்புகள் உயர்ந்திருக்கும் கொம்புகளாகும். ஆகையினால் இதன் உயரம் மிக பயங்கரமாயிருக்கும். 7 இராஜ்ஜியங்களையும் ஆளப்போகும் ஆட்டுக்குட்டியாகவும் ஏழு வானங்களிலும் கால் தடம் பதிக்கும் ஆட்டுக்குட்டியாகவும் இருக்கும்.
ஏழு கண்கள் என்பது பூமியெங்கும் அனுப்பப்படுகிற ஏழு ஆவிகள் என்று சொல்லப்பட்டுள்ளது. சிங்காசனத்தின் முன்பாக எரிந்து கொண்டிருக்கும் ஏழை தீபங்களாகிய ஏழு ஆவிகளை குறிக்கிறதாக இருக்குமா என்று தெரியவில்லை. அந்த ஏழு ஆவிகளும் பிதாவோடு தொடர்புள்ளதாகவும் இந்த ஏழு ஆவிகளும் கிறிஸ்துவோடு தொடர்பு உள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஏழு உலகின் காரியங்களையும் அறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த ஏழு ஆவிகளாகிய ஏழு கண்கள் ஆட்டுக்குட்டியின் ஏழு ஞானங்களை குறிக்கிறதாக இருக்கலாம். இந்த ஆட்டுக்குட்டியின் ஞானத்துக்கும் அறிவுக்கும் முன்பாக உலகத்தின் எத்தகைய ஞானங்களும் இணையில்லை என்று கூறலாம். தேவனுடைய ஞானம் சாலொமோனில், பெசலயேலில் விளங்கியது. கிறிஸ்துவின் ஞானம் அவருடைய சரீரமாகிய சபையில் விளங்குகின்றது. தேவகுமாரன் வந்து புத்தியை கொடுப்பது உண்மையென்றால் அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்கள் எல்லாம் அடங்கி இருக்க வேண்டும். ஆகையினால் தான் ஞானத்தில் குறைவு உள்ளவன் அவரிடம் கேட்கச் சொல்லியுள்ளார்.
ஆட்டுக்குட்டி காயப்பட்டு இருக்கலாம், உலகத்தாரால் சிதைக்கப்பட்டு இருக்கலாம். ஆனாலும் பரலோகம் வரை ஏறிச் செல்லும் ஆற்றலும் ஞானமும் உடைய ஆட்டுக்குட்டிக்கு இணையாக புறமத கோயில்களில் சுமந்து செல்லப்படும் ஆட்டுக்கு இல்லை என்பதை அறிவோமாக.
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது.
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.
கொலோ 2:9,10...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment