CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - கண்ணாடிக் கடல்

கண்ணாடிக் கடல்

வெளி 4:6a. அந்த சிங்காசனத்திற்கு முன்பாக பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது. வெளி21:11;22:1;யோபு28:17;எசேக்1:22;வெளி15:2;யாத்38:8;1இரா7:23;எபி9:13,14.


ஆசரிப்புக்கூடாரம் மற்றும் தேவாலயத்திற்கு முன்பாக வெண்கல தொட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பப்பட்டிருக்கும். கடல் போன்ற தோற்றமுள்ளதினால் வெண்கலகடல் என்றும் அழைப்பதுண்டு. ஆரோனும் அவன் குமாரர்களும் தங்கள் கைகளை கால்களை கழுவுவதற்காகவும், பலிபொருள்களை கழுவுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. பரலோகத்தில் சிங்காசனம் முன்பாக உள்ள கண்னாடிக்கடல் வெண்கல தொட்டியைக் குறிக்குமென்றால் ஆசரிப்புக்கூடாரமும், தேவாலயமும் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் இடமாகவே அறியப்படும். மேலும் பரலோகத்தில் உள்ள கண்ணாடிக்கடலின் பயன்பாடு குறித்த விஷயங்கள் நமக்கு தரப்பட்வில்லையென்றாலும் இது வெண்கல தொட்டியைக் குறிப்பதாக கருதமுடியாது. இரண்டிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. கடலில் அமர்ந்துள்ள பாபிலோன் வேசிக்கு எதிரிடையாக தேவன் இந்த காட்சியை யோவானுக்கு வெளிபடுத்துகின்றார். கண்ணாடிக்கடல் என்பது தெளிவான மனோபாவத்தை காண்பிக்கின்றது. தேவன் முன்னிலையில் வருகிறவர்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும், சுத்தமனசாட்சியிலே விசுவாசத்தை காத்துக்கொள்கிறவர்களாகவும் காணப்பட வேண்டும் என்பதை அறிவிக்கின்றது. இயேசு கிறிஸ்து தேவன் முன்னிலையிலும் இவ்வுலகத்திலும் தெளிந்த மனசாட்சியை பெற்றிருந்தார். அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரைப்போலவே தெளிந்த மனசாட்சியுடையவர்களாயிருக்க வேண்டும். தேவன் முன்புள்ள தெளிவுக்கு இணையாக நமக்குள் உள்ள தெளிவு காணப்பட வேண்டும். துவக்கத்திலிருந்தே வெளிபடைதன்மையை தேவன் வலியுறுத்துகின்றார். தேவன் முன்னிலையில் எந்த மறைவும், ரகசியமும் இல்லை. எல்லாம் வெளியரங்கமாயிருக்கிறது.  ஆகவே தேவன் முன்பாக பிரவேசிக்கிற நாம் கண்ணாடிக்கடல் போன்ற மனசாட்சியை உடையவர்களாயிருக்கிறோமா?.அப்படி இல்லையென்றால் அதுவே அக்கினி கடலாக மாறிவிடும்.  


குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்;1தீமோத்தேயு 1:18,19.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்