CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - நிர்பாக்கியன்

நிர்பாக்கியன்

 வெளி 3:17a. நீ நிரபாக்கியமுள்ளவன். 

இச்சொல்லுக்கு துரதிர்ஷ்டசாலி, வெறுக்கத்தக்கவர், மிக பரிதாபத்துக்குரியவர், இழியவர் என்று பலவாறாகப் பொருள் தரப்படுகின்றது. இச்சொல் இரு இடங்களில் ரோமர் 7:24; வெளி 3:17 மட்டுமே வருகின்றது. வெதுவெதுப்பான தன்மை கொண்டவன் நிர்பாக்கியமுள்ளவனாய் இருக்கிறான். தொழில்களின் அடிப்படையில் தகுதி இழக்கப்பட்டவனாக அல்லாது குணங்களின் அடிப்படையில் தகுதி இழக்கப்பட்டவனாக இருக்கின்றான். நன்றாக படித்த ஒருவர் வெறுப்புணர்வோடு அருவருப்பானவைகளையும் தன் குணங்களினூடே கொண்டிருப்பான் ஆனால் நிர்பாக்கியமுள்ளவனே. உள்ளவனே பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கும் தகுதி இல்லாதவனாகின்றான். ஜாதிகளின் அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் தகுதியிழப்பை விவிலியம் கூறவில்லை. கடவுள் சம்பந்தப்பட்டதிலும், விவிலிய மாண்பு சம்பந்தப்பட்டதிலும், ஆவிக்குரிய நிலை சம்பந்தப்பட்டதிலும் பாக்கியம் நற்பாக்கியம் நிகழும் என்பதை கவனிக்குக. கிறிஸ்துவை பின்பற்றுகிறவன் மற்ற எல்லா மதங்களிலும் உள்ளவர்களை விடவும் தகுதிக்குரியவனாகின்றான். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பிறிதானவர்கள் நிர்பாக்கியசாலிகள் ஆகின்றனர். சபைகளில் நிலை நிற்க முடியாத பாவிகள் நிர்பாக்கியசாலிகள். ஆடையோ, ஆபரணமோ, அலங்காரமோ, கல்வியோ, பணமோ, அந்தஸ்தோ தகுதியை தீர்மானிக்கவில்லை. ஆவியின் கனி நிறைந்த வாழ்வே தகுதியை தீர்மானிக்கின்றது. மனிதன் பார்க்கிற பிரகாரம் நான் பார்ப்பதில்லை என்று ஆண்டவர் கூறுகின்றார். தேவ சபையில் பணம் படைத்தவர்கள் கல்விமான்கள் நிர்பாக்கியசாலிகளாகவும், 2 காசு விதவை பாக்கியசாலியாகவும் மாறியதை கவனிப்போம். சமுதாயத்தில் நிர்பாக்கியசாலியாக இருந்த ஆயக்காரன் பாக்கியசாலியானான். பாக்கியசாலியாக இருந்த பரிசேயன் நிர்பாக்கியமூள்ளவன் ஆனான்.

தேவனுடைய ராஜ்யத்தை கண்ணாரக் கண்டு தரிசித்து அதைக்குறித்து புலமையாக பேசியும் ராஜ்யத்தில் பிரவேசிக்காதவன் நிர்பாக்கியசாலிகளேயாவர். இவ்வுலக ராஜ்யத்தில் நாம் பெரியவர்களே. ஆனால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலுமானால் பாக்கியசாலிகள். இல்லையென்றால் துரதிருஷ்ட வாதிகள். லவோதிக்கேயா சபையார் எல்லாம் உடையவர்களாயிருந்தும் தேவனின் மகத்துவத்தையும்,  கிறிஸ்துவின் இரட்சண்யத்தையும், ஆவியின் கனியையும், விவிலியத்தின் மாண்பையும் உடையவர்களாக இராததினால் துரதிர்ஷ்டவாதிகள். இவர்களைப் போல நாம் காணப்படுகிறோமா?. இவ்வுலகில் நாம் பரதேசியாய் இருப்பதில் தவறில்லை. அவ்வுலகில் நாம் போய் சேர முடியுமானால் அதுவே பாக்கியமாகும். 

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 

மத்தேயு 7:21-24

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்