CCM Tamil Bible Study - காக்கும் ஆண்டவர்
- Get link
- X
- Other Apps
காக்கும் ஆண்டவர்
வெளி 3:10c. தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். மத் 6:13;26:41;1கொரி10:13;எபே6:13;2பேது2:9.
இரட்சிக்கப்படாதவர்களை இரட்சிப்பதற்கோ அல்லது சிட்சிப்பதற்கோ அனுப்பபடும் சோதனைகால சோதனைகளிலிருந்து தேவன் தமது ஜனத்தை காக்கிறார் என்று அழுத்தமாகக் கூறுகின்றார் ஆண்டவர். இயற்கையின் சீற்றங்களில் தப்புவிக்கப்பட்ட நோவாவின் குடும்பம், நெருப்பிலிருந்து தப்புவிக்கப்பட்ட வாலிபர்கள், முழுகிப்போகாமல் தப்புவிக்கப்பட்ட பேதுரு, சிங்கங்களிடமிருந்து தப்புவிக்கப்பட்ட தானியேல் மற்றும் பவுல் போன்றவர்களை நம்முன் வைக்கின்றார். சுவிசேஷத்தினிமித்தம், விசுவாசத்தினிமித்தம், கிறிஸ்துவினிமித்தம் மட்டுமே தம்முடையவர்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கின்றார். கொரோனோ போன்ற இயற்கையின் பேரிடர்களிலிருந்து தேவன் தம்முடையவர்களை காக்கிறார்.
தேவனால் அனுப்பப்படும் சோதனை காலம் தேவனுடைய மக்களுக்கும் சோதனை காலமே. சோதனை காலத்தில் விசுவாசத்தில் தளர்ந்துப்போகாமலும், கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தில் குன்றி போகாமலும் முன்னேற விரும்புவோமெனில் நிச்சயம் தேவன் காக்கின்றார் என்பதையும் அனுபவிப்போம். அனேக பரிசுத்தவான்கள் கொரோனோ காலத்தில் தேவனால் காக்கப்படவில்லை. இதற்கு காரணம் தேடுவோமெனில் இக்காரியங்கள் குறித்த விஷயங்களை தேவன் மறைத்து வைத்துள்ளார் என்றே அறிய வேண்டியுள்ளது. ஏனெனில் பெரிய பரிசுத்தவான்கள் எனப்பட்டவர்களும் கொரோனோ பேரலையில் சிக்கிக் காணப்படாமற் போனார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். கர்த்தர் இப்படிப்பட்ட சோதனை காலத்தில் பக்தியுள்ளவர்களை – தேவனுக்கு பயந்து நடந்தவர்களை – தேவன் முன்னிலையில் திறந்த உள்ளத்தோடு நடந்துக் கொண்டவர்களை காக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தப்பி பிழைத்தவர்கள் பக்தியுள்ளவர்களும், அகப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்றும் குறிப்பிட முடியாது. தேவனுடைய ராஜாங்கத்துக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அது அவரின் விருப்பம்.
ஆனால் இவ்விதமாக, பரிசுத்தவான்கள் எனப்பட்டோர் தப்புவிக்கப்படவில்லையெனில் தப்பி பிழைத்தோர் மூன்று விஷயங்களில் மாற்றம் காண முயற்சிக்க வேண்டும். உங்கள் பக்திக்குரிய வாழ்க்கை முறையைசீர்படுத்த வேண்டும். தேவனுக்கு மட்டுமே பயந்து நடக்க பழகிக் கொள்ள வேண்டும். மூன்றாவது எல்லாவற்றிலும் தேவன் முன்னிலையில் திறந்த உள்ளத்தோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை காக்கிறார். அவரால் அனுப்பப்டும் தீங்குகளுக்கு தம்மேல் பற்றுக்கொண்டுள்ளவர்களை பலியாக்கமாட்டார் என்பது உண்மையே.
ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்கள் வழி; இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக் கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.
ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். சங்கீதம் 49:12-15..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment