CCM Tamil Bible Study - ஆவியால் அறியும் அறிவு - Spiritual Knowledge
- Get link
- X
- Other Apps
1Jn3:24b. And by this we know that He abides in us, by the Spirit whom He has given us. 1Jn4:7,12,15,16;Jn6:54-56;17:21;1Cor3:16;6:19;2Cor6:16;2Tim1:14;Gal4:5,6.
1யோவா3:24b. அவர் நம்மில் நிலத்திருக்கிறதை அவர் நமக்கு தந்தருளின ஆவியினாலே அறியலாம். 1யோவா4:7,12,15,16;யோவா6:54-56;17:21;1கொரி3:16;6:19;2கொரி6:16;2தீமோ1:14;கலா4:5,6.
ஆவியால் அறியும் அறிவு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதற்கு அடிப்படை காரணம் அவரது கட்டளைகளைக் கைக்கொண்டு அவைகளை நினைவகத்தில் கொண்டு வந்து, இருதயத்தில் பதித்து வைத்து அன்றாடம் தியானிப்பதாகும். அவருடைய வசனம் நம்மில் நிலைத்திருப்பதினால் வசனத்தை தருகிறவரும், நினைப்பூட்டுகிறவரும், புரியவைக்கிறவருமாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்ய வருகிறார். இந்த பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறார். கிரியைகளினாலும், நல்லொழுக்கங்களினாலும், தெய்வீக தன்மைகளினாலும் கிறிஸ்துவை நம்மிலிருந்து உலகிற்கு காண்பிக்கின்றார்.
கிறிஸ்துவானவர் நமக்குள் நிலைத்திருப்பதினால் மட்டுமே நாம் கிறிஸ்துவைப்போல வாழ முடியும். தேவனிடமிருந்து வந்தவர், தேவனுக்கு சமமாயிருந்தும் அதை வெளிபடுத்தாமல் எளிமையாக நடந்துக் கொண்டார். அதைபோலவே நமக்குள் இயேசுகிறிஸ்து நிலைத்திருப்பதினால் பெருமை, கர்வம், பொறாமை, அந்தஸ்து போன்ற யாவற்றையும் வெறுத்துவிட்டு கிறிஸ்துவைப்போல நடந்துக் கொள்ள வேண்டும். நம்மிலிருந்து வெளிப்படும் தன்மைகள், குணங்களின் அடிப்படையில்தான் கிறிஸ்துவானவர் நம்மில் இருக்கிறாரா இல்லையா என்பது வெளிப்படும்.
நமக்குள் கொண்டுவரப்பட்ட வசனத்தை நமது நாடி நரம்புகளினூடே கொண்டு செல்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. அதைப்போலவே நமக்குள் வாசம்பண்ணும் இயேசு கிறிஸ்துவைப்போல தோற்றத்திலும், செயலிலும், பேச்சிலும் நம்மை மாற்றமடைய வைக்கிறவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியின் துணையின்றி வசனத்தையோ, இயேசு கிறிஸ்துவையோ நாம் கொண்டிருக்க இயலாது. பரிசுத்த ஆவியானவர் வரங்களுக்காக கொடுக்கப்படவில்லை. இயேசு கிறிஸ்துவை நமக்குள் வாழவைக்கவே கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் நமக்குள் வாழ்விக்கப்படும்போது அதன் முடிவாகிய ஆவியின் கனி வெளிப்படும்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான் என்று சொல்வதை விட ஒருவன் கிறிஸ்துவைக் கொண்டிருந்தால் புது சிருஷ்டியாயிருப்பான் என்று சொல்வதே சிறப்பானதாகும். ஆம் பரிசுத்த ஆவியானவரின் பொறுப்பானது கிறிஸ்துவைப்போல நம்மை புது சிருஷ்டியின் முதற்பலன்களாக மாற்றுவதேயாகும்.
ஆவியின் திருப்பணிகளில் மிகவும் முக்கியமானதும், அவசியமானதுமானதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். ஆவியானவர் நம்மை பாவம் செய்யாதிருக்க , தவறு செய்யாதிருக்க நமக்குள் போராடுகிறார். ஆவியானவர் கிறிஸ்துவை நமக்குள் வாழ்விக்க போராடுகிறார். ஆவியானவர் கிறிஸ்துவின் சாயலை போன்ற புது சிருஷ்டியாக நம்மை உருவாக்குகிறார். ஆவியானவர் கிறிஸ்துவைப்போல எளிமையாகவும், தன்மையாகவும், பணிவாகவும் நடந்துக் கொள்ள தூண்டுகிறார். ஆவியானவர் கிறிஸ்துவின் இராஜ்யத்திலே நம்மைக் கொண்டு சேர்ப்பது வரையிலும் நம்மிலே கிரியை செய்கிறார்.
கேள்வி: ஆவியை பெற்ற நீங்கள் இந்த ஐந்து விஷயங்களில் ஆர்வம் உடையவர்களாயிருக்கிறீர்களா?
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:9-17.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment