CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஆரோக்கியமான உடல் - Message of Derek Prince

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)

அறிவர் டெரிக் பிரின்ஸின்  செய்தியின் விரிவாக்கம்

உடலுக்கு ஆரோக்கியம்


நீதிமொழிகள் 4:20-22.

பரிசுத்த ஆவியின் முக்கியமானதொரு செயற்பாடு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவனையும், ஆரோக்கியத்தையும் நமது சரீரங்களுக்குக் கொடுப்பதாகும். 

யோவான் 10:10 ல் திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.


நமக்கு முன்பாக இருவர் இருக்கிறார்கள்:

👎💔ஜீவனை அழிக்கும் சாத்தான்

👍💓ஜீவன் கொடுக்கும் இயேசு கிறிஸ்து


நாம் சாத்தானுக்கு இடம் கொடுத்தால் தேவன் நமக்கு அருளின ஆசீர்வாதங்களை திருடி, நம்முடைய சரீரங்களை கொல்லவும், நித்தியமாய் அழிக்கவும் அவன் வருவான். 

ஆகையினால்தான்..

எபேசியர் 4:27 ல் பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.

மேலும் மத்தேயு 13:19 .காண்க. 

இயேசுவோ நமது செத்துப்போன சரீரத்தை புதுப்பித்து , நமக்கு ஜீவன் தந்து , பரிபூரணப்பட வந்தார். 

இதனை…

ரோமர் 8:10,11 ல் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் என்றுக் கூறியுள்ளார். 

கிறிஸ்து உள்ளே வந்து நாம் மனந்திரும்பி  மறுஜென்மம் அடைந்து பழைய வாழ்வு முடிந்து நமக்குள் புது வாழ்வு ஆரம்பமாகிறது. 

2கொரிந்தியர் 5:17 ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

பழைய மாம்ச வாழ்க்கை முடிந்து, நம்மில் ஆவி ஊற்றப்பட்டு  நாம் உயிர்ப்பிக்கப்படுகிறோம். இதனால் நம் ஜீவன் மட்டுமல்ல நமது சரீரமும் புத்துயிர் அடைகின்றது. இந்த பரிசுத்த ஆவி வந்தபோது சரீரம் பெலனடைகின்றது. 

அப்போஸ்தலர் 1:8 ல் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். ஆவியில், சிந்தையில் மட்டுமல்ல சரீரத்திலும் பெலனடைகின்றோம். 

பவுல் அடிப்பட்டபோது:

அப்போஸ்தலர் 14:19,20 ல் பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான்.

இதனால்தான் அவர் சொல்லுகிறார்… 

2கொரிந்தியர் 4:7-12 ல்  இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; 

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.

★ இந்த உடல் ஆரோக்கியம் நமக்குள் தொடர்ந்து செயல்பட அவருடைய வார்த்தைகளை கவனிக்க வேண்டும். 

நீதிமொழிகள் 4:20-22. என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். 

★ அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். 

★ அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

★ பொதுவாகவே நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருப்பதையே தேவன் விரும்புகின்றார். 

3யோவான் 1:2 – பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.


நாம் சுகமாய் இருக்க 4 காரியங்களை செய்ய வேண்டும்

1. வசனத்தை கவனி – வசனத்தில் கவனம் செலுத்து

★ அவர் நம்மோடு பேசும்போது ஒருங்கிணைந்த கவனம் நமக்கு தேவை. விவிலியம் வாசிக்கும்போதும் இந்த கவனம் நமக்கு தேவை. பிரிந்த கவனம் ஆபத்தானது. கண் இங்கே மனம் வேறெங்கோ என்றல்லாது 

யாத் 15:26 ல் நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.

★ கேட்டு, செவிகொடுத்து தேவனுக்கே முழு கவனத்தையும் செலுத்து. அப்பொழுது வியாதிகள் வராது. 

ரோமர் 13:17 ன் படி.. விசுவாசம் நாம் கவனித்து கேட்பதினால்தான் வருகின்றது. 

★ வார்த்தையில் கவனம் செலுத்து. அடிக்கடி வாசித்து கவனத்தில் கொள். கொடுக்கப்படுவதை பாடப்புத்தகமாக திரும்ப திரும்ப வாசி அல்லது சொல்லபடுவதை கவனி.


2. செவியை சாய்த்துக் கேள்

★ தாழ்மையோடு பொறுமையாகக் கேள். கற்றுக்கொள்ளும் தன்மையோடு கேள். அவர் பேச, கற்றுக்கொடுக்க இடம் கொடு.

யாக்கோபு 1:18-21. அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

★ எதிர்த்து பேசாதே. எதிராய் – மாறுபாடாய் சிந்திக்காதே.

நான் உனக்கு போதிக்கிறேன்...

சங்கீதம் 32:8 ல் நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

★ கற்றுக் கொடுக்க அவரே நல்ல ஆசிரியர். விவிலிய ஆசிரியர் ஆவியானவர். 

2தீமோத்தேயு 3:14-17 ல் நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

★ கற்க நாம் ஒரு மாணவராய் மாற வேண்டும். அவரை ஆசிரியராக அமைத்துக் கொள். சொல்வதை அப்படியே செய்ய இடம் கொடு.


3. கண்களை விட்டு பிரிய இடம் தராதே

தாவீது சங்கீதம் 16:8 ல் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 

சங்கீதம் 119:97 ல்  உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

★ அவரை மட்டுமல்ல வசனத்தையும் கண்முன் கொண்டு வா. கண்களை விட்டு பிரியலாகாது என்றால் உன் மனகண்ணாகிய நினைவகத்தில் கொண்டுவா. மனதில் உள்ள எல்லாவற்றையும் வெளியேற்று. வசனம் மட்டுமே நினைவில் இருக்கட்டும். வசனம் சிந்தையை விட்டு விலகாதிருக்க முயற்சி செய். வசனத்தில் கூரான பார்வை அவசியம்

லூக்கா 11:34 ல் இயேசு… கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்.

★ வெளிச்சத்தால் நிறைந்த சரீரத்தில் வியாதிக்கு இடம் இல்லை. வியாதி இருளிலிருந்து தோன்றும். ஆரோக்கியம் வெளிச்சத்திலிருந்து தோன்றும்.

மல்கியா 4:2 ல்  என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். 


4. இருதயத்தில் பத்திரபடுத்து

★ இருதயத்துக்குள் போனால்தான் ஆரோக்கியம் வரும். இரத்தம் இருதயத்திலிருந்து உடலெங்கும் பாய்வதுபோல வசனத்தின் ஆரோக்கியம் உடல் முழுவதும் பாயட்டும்.

நீதிமொழிகள் 4:23 ல் எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள்,

★ இருதயத்துக்குள் எதுவும் போகாது காத்துக்கொள். உங்கள் இருதய்த்தில் உள்ளதே உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும். 

எபிரேயர் 4:12 ல் தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

★ வார்த்தையானது வல்லமையுள்ளது, கருக்கானது, உருவ குத்துகிறது, வகையறுக்கிறது. வசனமானது வியாதிகள் வர காரணமான பாவம், பலவீனம், கசடுகள், வெறுப்புகள் எல்லாவற்றையும் உருவ குத்தி வெளியேற்றும். 

நீதி 4:23 ல் அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். 

★ அங்கே ஜீவ ஊற்று உண்டாகும். ஆரோக்கிய நீர் புறப்படும். ஆம் ஆண்டவருடைய வசனத்தைக் கேட்டு, அதற்கு செவிசாய்த்து, உன் கண்களை விட்டு பிரிய இடம் தராது, இருதயத்தில் வைத்துக் கொண்டால் உனக்கு ஆரோக்கியம் உண்டாகும். வசனங்களை விடாதே, அவை உனக்கு ஜீவனையும் ஆரோக்கியத்தையும் தரும்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்