கிறிஸ்துவால் கட்டி எழுப்பப்பட்ட சகேயு
லூக்கா 19:1 – 10
இயேசு சொன்னார். லூக்கா 19:10 - இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.
சகேயு
★ தூய்மை என்று பொருள்.
★ எரிகோவை சார்ந்தவர்.
★ எரிகோ பட்டணமானது – சிலவகை மரங்களிலிருந்து கசியும் நறுமணப்பொருளாகிய Balsam ஏராளமாகவுள்ள பட்டணமாகும்.
★ இதனால் இங்குள்ள மக்கள் வசதிபடைத்தவர்களாக இருந்தனர். சகேயுவும் இத்தகைய பொருளை வியாபாரம் செய்ய கொண்டுவரும் மக்களிடமிருந்து ஏராளமான தீர்வைப்பெற்று வசதிபடைத்தவராக வாழ்ந்து வந்தார்.
★ இவர் அதிக தீர்வை வாங்குகிறவனாயிருந்ததினால் யூதர்கள் இவனை பாவியான மனுஷன் என்று கூறினர். வச 7.
அதாவது, ஆயம் வசூலிப்பவர்களை பாவியான மனிதன் என்பது இஸ்ராயேலரின் வழக்கம் ஆகும்.
★ உருவத்தில் குள்ளமானவன்.
இப்படிபட்ட ஒரு பாவியான மனுஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகத்துக்குரியவனாய் மாறக் காரணம் என்ன?
அல்லதுஇவனுடைய வாழ்வை கர்த்தராகிய இயேசு கட்டியெழுப்பக் காரணம் என்ன?
1. இவன் வாஞ்சையுள்ளவனாயிருந்தான் வச 3.
இவன் பணம் சம்பாதிப்பதில் ஆர்வமுள்ளவன்.
செல்வபிரியன்.
ஐசுவரியவான்.
இப்பொழுது இயேசுவை காண வாஞ்சிக்கின்றான்.
காரணம் என்ன?
பணம் – செல்வம் தராத ஏதோவொன்று இயேசுவில் இருப்பதைக் கண்டான்.
இன்றைய வழக்கம் – பணம் இருப்பவர்கள் இயேசுவை தேடுகிறார்கள்.
பணம் இல்லாதவர்கள் பணத்தை தேடுகிறார்கள்..
இயேசு கிறிஸ்து பணம் – செல்வம் – ஆஸ்தி ஆகிய யாவையும் விட பெரியவர். இதைக் கண்டான்.
சங்கீதம் 42:1,2 ல்
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது என்று தாவீது கூறுகின்றார்.
மேலும் தாவீது சங்கீதம் 63:1 - 5 ல்
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும் என்று கூறுகின்றார்.
யோபு 19:27,28 ல் இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும் என்று கூறுகின்றார்.
ஏசாயா 26:9 ல் என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன் என்று கூறுகின்றார்.
சகேயு இயேசுவை காண வாஞ்சையாயிருந்து அவரை கண்டான். அகமகிழ்ந்தான்.
நாம் எப்படி?
2. இயேசுவை சந்தோஷமாக தன் வீட்டுக்கு அழைத்துப்போனான் வச 6.
தன் வீட்டுக்கு வர விரும்பியவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான்.
பணம், பொன், பொருள் ஆகியவற்றினால் தன் வீட்டை நிரப்பிய சகேயு அதை விட மேலான இயேசு தன் வீட்டுக்குள் வருவதை சந்தோஷமாக கருதினான்.
இயேசுகிறிஸ்து வெளி 3:20 ன் படி - இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் என்று கூறுகின்றார்.
நாம் அழைத்துப்போனால் யோவான் 14:23 ன் படி – உன் வீட்டில் உன்னோடு தங்குவேன் என்று கூறுகின்றார்.
மாற்கு 5:22,3 ல் யவீரு இயேசுவை தன் வீட்டுக்கு அழைத்தான். இறந்துபோன தன் மகளை உயிரோடே பெற்றுக்கொண்டான்.
ஆம் சகேயு இயேசுவை தன் வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் அழைத்துப் போனான்.
நாம் எப்படி?
3. இயேசு தன் வீட்டில் நிலைத்திருக்கும்படியாக – தொடர்ந்து வாழும்படியாக அவருக்கு பிடிக்காத பொன், வெள்ளி, செல்வம் யாவற்றையும் எடுத்து ஏழைகளுக்குக் கொடுத்தான் வச 8.
வஞ்சனையின் பொருள் வைத்திருந்த அனனியா – சப்பீராள் மடிந்தனர். அப் 5:1-10.
சாபத்தின் பொருளை வீட்டில் வைத்திருந்த கேயாசி குஷ்டரோகியாகி ஊழியத்தை விட்டு விலகிப்போனான்.
2இரா 5:26,27.
சகேயு இவை அனைத்தையும் தன் வீட்டைவிட்டு அகற்றினான்.
தன்னோடு வைத்திருந்த எல்லாரையும் அனுப்பிவிட்டான்.
இயேசு மட்டுமே எனக்கு போதுமானவர்.
அவர் என் வீட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்…
அவர் நம் வீட்டில் இருக்க வேண்டுமானால் அருவருப்பானவைகளை அகற்ற வேண்டும்.
தாவீது சொல்லுகிறார் சங்கீதம் 101: 7 ல் கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
ஆம் சகேயு இயேசுவை வைத்துக்கொண்டு யாவையும், எல்லாரையும் வெளியேற்றினான்.
இப்படி செய்த சகேயுவின் வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.
பணத்தால் கட்டப்பட்ட வீடு இரட்சிப்பால் கட்டப்படுகிறது…
ஊராரின் சாபத்தால் கட்டப்பட்ட வீடு ஆசீர்வாத வீடாயிற்று..
ஒருவராலும் விரும்பப்படாத வீடு இயேசுவாலும், சீஷர்களாலும் விரும்பப்பட்ட ஆபிரகாமின் வீடாயிற்று.
ஊரெல்லாம் சண்டைபண்ணி கெட்டபெயர் வாங்கி வம்பழந்த ஒரு மனிதன் ஆபிரகாமின் குமாரனாக மாறினான்.
நாம் எப்படி?
ஆம். இயேசு கிறிஸ்து சகேயுவின் வீட்டை இரட்சிப்பின் வீடாகக் கட்டியெழுப்பினார்.
ஆமென்.
Comments
Post a Comment