CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

The Lord built Joshua - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட யோசுவா

கட்டி எழுப்பப்பட்ட யோசுவா

வேலைகாரனாக இருந்து வேந்தனாக மாறிய யோசுவா

★ யோசுவா என்றால் யெகோவா என் மீட்பு என்று பொருள். 
★ யோசுவாவின் முதற்பெயர் ஓசேயா. எண்13:8,16.
★ எபிரேய மொழியில் Jehoshuah என்று அழைக்கப்படுகிறார். 
★ இந்த பெயரும் இயேசுவின் பெயரும் ஒன்றாக இருப்பதாக கருதப்படுகிறது.
★ தகப்பன் பெயர் நூன்..
★ யோசேப்பின் குமாரனாகிய எப்பிராயீம் கோத்திரத்தை சார்ந்தவன். 
★ எகிப்திலிருந்து புறப்படும்போது யோசுவாவிற்கு ஏறக்குறைய 40 வயது. 
★ கானான் தேசத்தை வேவுபார்க்க அனுப்பப்பட்ட 12 பேர்களில் ஒருவர். எண் 13. 
★ மோசேக்கு நல்ல செய்தியை கொண்டு வந்தவர்களில் காலேபோடு கூட இந்த யோசுவாவும் உண்டு…

மோசேக்கு பணிவிடைகாரனாகவும், ஊழியகாரனாகவும் காணப்பட்டான். 
மோசேயின் உயர்வில் 2 பேர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் மோசேயின் அண்ணன் ஆரோன், இன்னொருவர் மோசேயின் வேலைகாரன் யோசுவா
மோசேயின் வெற்றியில் இவர்களின் பங்கு முக்கியமானது.  ஒரு சபையின் வளர்ச்சியில் போதகருக்கு துணையாக மூப்பர்களும், வாலிபர்களும் இருப்பார்களெனில் சபை வளர்ச்சியடையும்…

இந்த யோசுவாவை குறித்து மேன்மையாக சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள்…

யோசுவா 1:5,6
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 

யோசுவா 4:14 
அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

யோசுவா10:12-14 
கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது. இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். 

யோசுவா இவ்வளவு மேன்மையடைய காரணம் கர்த்தர் அவரை நடத்தினார், போதித்தார், கட்டியெழுப்பினார். 

இதற்குரிய காரணங்கள் என்ன?

1. யோசுவா பிரமாணத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்

யோசுவா 1:7,8.

பிரமாணமானது புத்திமானாய் நடப்பதற்கும், காரியங்களை வாய்க்க செய்வதற்கும் அவசியமானது..

யோசுவா மோசே கற்பித்த பிரமாணத்தை விட்டு விலகவில்லை. அதை உணவாகவும், பானமாகவும் கொண்டார். யார் பேசினாலும், இகழ்ந்தாலும், குடும்பத்தார் எதிர்த்தாலும் அதில் உறுதியாய் நின்றார்.  ஆகையினால்தான் நிறைய நல்ல நண்பர்கள்கிடைத்தனர்,  குடும்பத்தாரும் அடங்கியிருந்தனர்.

தாவீது சங்கீதம் 119:23 ல் பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன் என்று கூறுகின்றார்.

உபத்திரவம் வந்தாலும் இதை விட்டு விலகேன்..  சங்கீதம் 119:67,71 - நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் என்று கூறுகிறார். 


2. யோசுவா மோசேக்கு ஊழியகாரனாகவும், பணிவிடைகாரணாகவும் இருந்தார்

யாத் 24:13;33:11; எண் 11:28.

உண்மையாய் ஊழியம் செய்தார்…
உத்தமமாய் பணிவிடை செய்தார்…

எபேசியர் 6:5-8 வரை உள்ளதுபோல..
மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்தார்.

இயேசுவுக்கு யோவான் ஸ்நானகன் பணிவிடை செய்ததை போல.. அப்13:25.

அதனால்தான் இயேசு மத் 20:26 ல் உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன் என்று கூறினார். 

யோசுவா நல்ல ஒரு வேலைகாரனாக இருந்தான். 

பெற்றோருக்கும், ஊழியகாரருக்கும் பணிவிடை செய்வது ஆசீர்வாதமானது..


3. யோசுவா ஆசரிப்புகூடாரத்தைவிட்டு பிரியாதிருந்தார்

யாத் 33:11. 

மோசேயோடு நல்ல உறவு இருந்ததால் தேவனோடும் நல்ல உறவு இருந்தது. 
தேவனோடு நல்ல உறவு இருந்ததால் தேவ சமுகத்தோடும் நல்ல உறவு இருந்தது. 
அதனால் ஆசரிப்பு கூடாரத்தைவிட்டு விலகாதிருந்தார்..

தாவீது 
1நாளா 29:3 ல் இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

சங்கீதம் 27:4 ல் கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதம் 84:10 ல் ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று கூறுகிறார்.

நாம் ஊழியரோடு நல்ல உறவு கொண்டிருந்தால் தேவனோடும் தேவ சந்நிதானத்தோடும் நல்ல உறவு வைத்திருப்போம்.


4. யோசுவா தன் குடும்பத்தாரோடு கர்த்தரை சேவித்தார்

யோசுவா 24:15. 

சேவித்தல் என்பதற்கு கர்த்தருக்கு பணி செய்தல் என்பதாகும். 
தொழுகை செய்வது மட்டுமல்ல, 
அவருக்கு பணிவிடை செய்வதிலும் குடும்பமாக ஈடுபட்டார்கள். 

குடும்பத்தின் தலை போகிற வழியில் பிள்ளைகளும் நடக்க வேண்டும். 
அப்பொழுதுதான் குடும்பம் ஆசீர்வாதம் பெறும்…
சங்கீதம் 128

நாம் சபையில் எத்தகைய பணிவிடைகளை செய்கிறோம்?


5. தலைமை சொன்னதை சொன்னபடிசொன்ன நேரத்தில் செய்து முடிக்கிறவராயிருந்தார்

யோசுவா 11:15. 

செய்துவிட்டு நான் செய்து முடித்தேன் என்று சரியான நேரத்தில் ரிப்போர்ட் கொடுக்கிறவர். 

ஆகையினால்தான் மோசேயின் கனம், மோசேயின் பதவி யாவும் கிடைக்கப்பெற்றார். 
எண்ணாகமம் 27:18-23.

நாம் நம் போதகர் சொன்னபடி செய்கிறோமா?


6. யோசுவா ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட்டார்

உபாகமம் 34:9
எண்ணாகமம் 27:18.

தலைவரிடம் இருந்த ஆவியை உடையவர்.
தேவனிடமிருந்த ஆவியை உடையவர். 
ஆகையினால் தான் பிடித்து வெளியே தள்ளினாலும் விட்டோடி போகாதவராயிருந்தார். 

ஒரே ஆவி இருந்தால் பிரிவினை இல்லை. தகப்பனின் ஆவியை பிள்ளைகளும் போதகரின் ஆவியை மூப்பர்களும் விசுவாசிகளும் கொண்டிருக்க வேண்டும்.

பிலிப்பியர் 2:1,2 - ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.


7. யோசுவா நல்ல செய்தியை கொண்டு வந்தார்

எண்ணாகமம் 14:6-10.

தலைவருக்கு பிடிக்கிற செய்தி
தேவனுக்கு பிடிக்கிற செய்தி கொண்டு வந்தார். 
அது விசுவாசத்தின் செய்தியாகும். 
ரோமர் 10:8.
1தீமோத்தேயு 4:6 – 

தேவன் மேல் பற்றை உண்டாக்கும் செய்திகளை நாம் விரும்புகிறோமா?


8. யோசுவா தானும் தனது சகாக்களும் ஆணையிட்டதில் தவறவில்லை

யோசுவா 9:15;10:4.

எதிராளியாயிருந்தாலும் கொடுத்த வாக்கை மறுக்கவில்லை.

தாவீது சங்கீதம் 15:4 ல்  ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். 


9. ஜனத்தின் பாவத்துக்காக தேவன் முன்னிலையிலும், மூப்பர்கள் முன்னிலையிலும் முகங்குப்புற விழுந்து மன்றாடினார்

யோசுவா 7:6.

எஸ்தர் தன் ஜனங்களுக்காக ராஜாவிடம் மன்றாடியதைபோல.. எஸ்தர் 4:8.

தனது தலைவர் மோசேயை போலவே மன்றாடினார்.
அதனால்தான் தலைவரானார். 

நாம் மற்றவர்களின் பாவத்துக்காக மன்றாடுகிறோமா?...


10. மோசேயை போல கபடில்லாமல், வஞ்சனையில்லாமல் தன் மக்களை கண்டிக்கிறவராயும், எச்சரிக்கிறவராயும் இருந்தார். 

யோசுவா 23:12-16.

நல்ல தலைவன் ஆசீர்வதிக்கிறவனாயிருக்கிறான்..
ஆனால்…
அதைவிடவும் ஜனங்களுக்கு வரும் அழிவை சுட்டிகாட்டி எச்சரிக்கிறவனகவும் இருக்க வேண்டும். 
எசேக் 3:18.
நீதி 19:25.
1தீமோ 5:20.

நமது ஊழியர் கடிந்து கொள்வதை நாம் விரும்புகிறோமா ?

யோசுவாவை கர்த்தர் கட்டியெழுப்பினார். வேலைக்காரன் வேந்தனானார்.

ஆமென்.

Comments

Popular posts from this blog

CCM Tamil Bible Study - ஆறுதல் தரும் கிறிஸ்து - Comforter Christ

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

The Lord built Paul - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட பவுல்