Posts

Showing posts from February, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

The Lord built Isaac's family - CCM Tamil Bible Study - ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது

ஈசாக்கின் குடும்பம் கட்டப்பட்டது ஆதியாகமம் 25:19-26 கலாத்தியர் 4:23-31 மத்தேயு 8:5-13 ★ ஈசாக்கு என்றால் நகைப்பு என்று பொருள். ★ ஆபிரகாமின் 100 வயதில் பிறந்தவன். ★ வாக்குதத்தத்தின்படி பிறந்தவன். ★ 40 வயதில் மாமா மகள் ரெபேக்காளை திருமணம் செய்தார். ★ 60 வயதில் ஏசா, யாக்கோபு என்ற இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தான். ★ ஒரே மனைவியையுடையவனாயிருந்தான். ★ தனது 180 ஆம் வயதில் மரித்துப்போனான். ★ ஆதி முற்பிதாக்களில் ஒருவராக அறியப்படுகின்றார்.  ★ ஈசாக்கு இயேசுவுக்கு ஒப்பிடப்படுகிறார். ★ ஈசாக்கு பலி செலுத்தப்பட்டு மீட்கப்பட்டான்.  ★ இயேசு கிறிஸ்து பலி செலுத்தப்பட்டு உலகிற்கு மீட்பை உண்டு பண்ணினார்.  இந்த ஈசாக்கு பிள்ளைபாக்கியம் இல்லாமலிருந்து இரு பிள்ளைகளை பெற்றெடுக்க காரணம் என்ன? ஈசாக்கின் குடும்ப விருத்தி கட்டியெழுப்பப்பட காரணம் என்ன? 1. ஈசாக்கின் பிறப்பு தேவனால் உண்டானது ஆதி 17:19 - அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கைய...

The Lord built Samaritan Woman - CCM Tamil Bible Study - கட்டியெழுப்பப்பட்ட சமாரியா பெண்

கட்டியெழுப்பப்பட்ட சமாரியா பெண்   சமாரியா - இந்த தேசம் எருசலேமிலிருந்து வடக்கு பக்கமாக 30 மைலுக்கப்பால் இருந்தது. உம்ரி அரசன் மலைபாங்கான இப்பகுதியில் உள்ள ஒரு மலையை சமாரியா என்பவனிடமிருந்து வாங்கி அதில் கோட்டைகளை கட்டி, அவைகளுக்கு சமாரியா என்று பெயரிட்டான்.  1இராஜாக்கள் 16:23,24. ★ இது வட இஸ்ராயேலின் தலைநகரம். ★ அசீரியர்களால் பல ஜன குடியேற்ற பகுதியாக மாறியது. ★ இங்கு பாகாலுக்கு கோயில்கள் உண்டு. இங்குள்ளவர்கள் விக்கிரகராதனை செய்கிறவர்களாகவும், சிலர் பாலியல் தொழில் செய்கிறவர்களாகவும் காணப்பட்டனர்.  ★ இயேசுவின் காலத்துக்கு பின் பிலிப்பு இங்கு ஊழியம் செய்தார்.  ★ இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் பாலியல் தொழில் அல்லது விபசார ★ பாவம் செய்து வந்த ஒரு பெண்ணை நலவழி படுத்தி சிறந்த பெண்மணியாக மாற்றினார்.  தாறுமாறான அவளின் வாழ்வு கர்த்தராகிய இயேசுவினால் கட்டியெழுப்பப்பட்டு ஆவிக்குரிய வாழ்வாக மாறியது.  இதற்கு அவள் என்ன செய்தாள்? 1. கேள்வி கேட்கிறவளாயிருந்தாள் ஒன்றை அறிந்துக்கொள்ள துடிக்கும் உணர்வு உடையவளாயிருந்தாள். சண்டை பண்ணி கேள்வி கேட்கிறவளல்ல, அறியும்படியா...

The Lord built Joshua - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட யோசுவா

கட்டி எழுப்பப்பட்ட யோசுவா வேலைகாரனாக இருந்து வேந்தனாக மாறிய யோசுவா ★ யோசுவா என்றால் யெகோவா என் மீட்பு என்று பொருள்.  ★ யோசுவாவின் முதற்பெயர் ஓசேயா. எண்13:8,16. ★ எபிரேய மொழியில்  Jehoshuah என்று அழைக்கப்படுகிறார்.  ★ இந்த பெயரும் இயேசுவின் பெயரும் ஒன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. ★ தகப்பன் பெயர் நூன்.. ★ யோசேப்பின் குமாரனாகிய எப்பிராயீம் கோத்திரத்தை சார்ந்தவன்.  ★ எகிப்திலிருந்து புறப்படும்போது யோசுவாவிற்கு ஏறக்குறைய 40 வயது.  ★ கானான் தேசத்தை வேவுபார்க்க அனுப்பப்பட்ட 12 பேர்களில் ஒருவர். எண் 13.  ★ மோசேக்கு நல்ல செய்தியை கொண்டு வந்தவர்களில் காலேபோடு கூட இந்த யோசுவாவும் உண்டு… மோசேக்கு பணிவிடைகாரனாகவும், ஊழியகாரனாகவும் காணப்பட்டான்.  மோசேயின் உயர்வில் 2 பேர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் மோசேயின் அண்ணன் ஆரோன் , இன்னொருவர் மோசேயின் வேலைகாரன் யோசுவா மோசேயின் வெற்றியில் இவர்களின் பங்கு முக்கியமானது.  ஒரு சபையின் வளர்ச்சியில் போதகருக்கு துணையாக மூப்பர்களும், வாலிபர்களும் இருப்பார்களெனில் சபை வளர்ச்சியடையும்… இந்த யோசுவாவை குறித்து மேன்மையாக சொல்லப்பட்...

The Lord built Zacchaeus - CCM Tamil Bible Study - கட்டி எழுப்பப்பட்ட சகேயு

கிறிஸ்துவால் கட்டி எழுப்பப்பட்ட சகேயு லூக்கா 19:1 – 10 இயேசு சொன்னார். லூக்கா 19:10 - இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.  சகேயு ★ தூய்மை என்று பொருள். ★ எரிகோவை சார்ந்தவர்.  ★ எரிகோ பட்டணமானது – சிலவகை மரங்களிலிருந்து கசியும் நறுமணப்பொருளாகிய Balsam ஏராளமாகவுள்ள பட்டணமாகும்.  ★ இதனால் இங்குள்ள மக்கள் வசதிபடைத்தவர்களாக இருந்தனர். சகேயுவும் இத்தகைய பொருளை வியாபாரம் செய்ய கொண்டுவரும் மக்களிடமிருந்து ஏராளமான தீர்வைப்பெற்று வசதிபடைத்தவராக வாழ்ந்து வந்தார்.  ★ இவர் அதிக தீர்வை வாங்குகிறவனாயிருந்ததினால் யூதர்கள் இவனை பாவியான மனுஷன் என்று கூறினர். வச 7. அதாவது, ஆயம் வசூலிப்பவர்களை பாவியான மனிதன் என்பது இஸ்ராயேலரின் வழக்கம் ஆகும்.  ★ உருவத்தில் குள்ளமானவன். இப்படிபட்ட ஒரு பாவியான மனுஷன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிநேகத்துக்குரியவனாய் மாறக் காரணம் என்ன? அல்லது இவனுடைய வாழ்வை கர்த்தராகிய இயேசு கட்டியெழுப்பக் காரணம் என்ன? 1. இவன் வாஞ்சையுள்ளவனாயிருந்தான்  வச 3.  இவன் பணம் சம்பாதிப்பதில் ஆர்வமுள்ளவன். செல்வபிரியன். ஐசுவரியவான்....