Posts

Showing posts from April, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - நிர்பாக்கியன்

நிர்பாக்கியன்  வெளி 3:17a . நீ நிரபாக்கியமுள்ளவன்.  இச்சொல்லுக்கு துரதிர்ஷ்டசாலி, வெறுக்கத்தக்கவர், மிக பரிதாபத்துக்குரியவர், இழியவர் என்று பலவாறாகப் பொருள் தரப்படுகின்றது. இச்சொல் இரு இடங்களில் ரோமர் 7:24; வெளி 3:17 மட்டுமே வருகின்றது. வெதுவெதுப்பான தன்மை கொண்டவன் நிர்பாக்கியமுள்ளவனாய் இருக்கிறான். தொழில்களின் அடிப்படையில் தகுதி இழக்கப்பட்டவனாக அல்லாது குணங்களின் அடிப்படையில் தகுதி இழக்கப்பட்டவனாக இருக்கின்றான். நன்றாக படித்த ஒருவர் வெறுப்புணர்வோடு அருவருப்பானவைகளையும் தன் குணங்களினூடே கொண்டிருப்பான் ஆனால் நிர்பாக்கியமுள்ளவனே. உள்ளவனே பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்திற்கும் தகுதி இல்லாதவனாகின்றான். ஜாதிகளின் அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் தகுதியிழப்பை விவிலியம் கூறவில்லை. கடவுள் சம்பந்தப்பட்டதிலும், விவிலிய மாண்பு சம்பந்தப்பட்டதிலும், ஆவிக்குரிய நிலை சம்பந்தப்பட்டதிலும் பாக்கியம் நற்பாக்கியம் நிகழும் என்பதை கவனிக்குக. கிறிஸ்துவை பின்பற்றுகிறவன் மற்ற எல்லா மதங்களிலும் உள்ளவர்களை விடவும் தகுதிக்குரியவனாகின்றான். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பிறிதானவர்கள் நிர்பாக்கியசாலி...

CCM Tamil Bible Study - கிரீடம்

கிரீடம் வெளி 3:11b. ஒருவரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு. வெளி2:10;4:4,10;1கொரி9:25;2தீமோ2:5;4:8;யாக்1:12;1பேது5:3,4; எரே 40. கிரீடம் சூட்டப்படுதல் மகிழ்வான காரியமும், பெருமைக்குரிய காரியமுமாகும். ஆனால் இந்த கிரீடம் பெற்றுக்கொள்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள விலை மிகவும் அதிகமானது. எத்தனையோ ஒழுங்கு முறைகள் வழியாகதான் இதனை பெற்றுக்கொண்டுள்ளனர் பிலதெல்பியர். பெற்றுக்கொண்ட கிரீடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக்கூடிய காரியம் முக்கியமானதாகும். அதைவிட தலையில் சூட்டப்பட்டுள்ள கிரீடத்துக்காக ஆசைபடுவோரும், எடுத்துக்கொள்ள பதுங்கியிருப்போரும் மிகவும் அதிகமாயுள்ளனர். பெற்றுக்கொள்ள எவ்வளவு முயற்சித்தார்களோ அதைவிடவும் அதிகமாக கிரீடத்தை பிறர் கவர்ந்துக்கொள்ளாமல் காப்பதுவே மேலானது ஆகும்.  சூட்டப்பட்ட கிரீடத்தை பறித்துக்கொள்ள கொள்ளைக் கூட்டம் சுற்றிலும் காணப்படுகின்றனர் என்பதை மறந்துவிடலாகாது.  விவிலியத்தில் இரு இடங்களில் கிரீடங்களை பறித்துக்கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆதிமனிதனின் தலைமேல் வைக்கப்பட்டிருந்த அதிகாரம் என்ற கிரீடத்தை கூடவே இருந்த சர்ப்பம் வஞ்சித்துப் பறித்து விட்டது. நேபு...

CCM Tamil Bible Study - காக்கும் ஆண்டவர்

காக்கும் ஆண்டவர் வெளி 3:10c. தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். மத் 6:13;26:41;1கொரி10:13;எபே6:13;2பேது2:9. இரட்சிக்கப்படாதவர்களை இரட்சிப்பதற்கோ அல்லது சிட்சிப்பதற்கோ அனுப்பபடும் சோதனைகால சோதனைகளிலிருந்து தேவன் தமது ஜனத்தை காக்கிறார் என்று அழுத்தமாகக் கூறுகின்றார் ஆண்டவர். இயற்கையின் சீற்றங்களில் தப்புவிக்கப்பட்ட நோவாவின் குடும்பம், நெருப்பிலிருந்து தப்புவிக்கப்பட்ட வாலிபர்கள், முழுகிப்போகாமல் தப்புவிக்கப்பட்ட பேதுரு, சிங்கங்களிடமிருந்து தப்புவிக்கப்பட்ட தானியேல் மற்றும் பவுல் போன்றவர்களை நம்முன் வைக்கின்றார். சுவிசேஷத்தினிமித்தம், விசுவாசத்தினிமித்தம், கிறிஸ்துவினிமித்தம் மட்டுமே தம்முடையவர்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கின்றார். கொரோனோ போன்ற இயற்கையின் பேரிடர்களிலிருந்து தேவன் தம்முடையவர்களை காக்கிறார்.  தேவனால் அனுப்பப்படும் சோதனை காலம் தேவனுடைய மக்களுக்கும் சோதனை காலமே. சோதனை காலத்தில் விசுவாசத்தில் தளர்ந்துப்போகாமலும், கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தில் குன்றி போகாமலும் முன்னேற விரும்புவோமெனில் நிச்சயம் தேவன் காக்கின்றார் என்பதையும் அனுபவிப்போம். அனேக பரிசுத்தவான்கள் கொரோனோ காலத்தில் ...