Posts

Showing posts from October, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - குதிரை போன்ற வெட்டுக்கிளி

வெளி 9:7a. அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது.  2இரா5:9;6:17;23:11;சங்20:7;33:17;147:10;நீதி21:31;எரே4:13;எசே26:7.. குதிரை போன்ற வெட்டுக்கிளி குதிரை வேகத்துக்கும், அஞ்சாமைக்கும், யுத்தப் பணிகளுக்கும், பலத்துக்கும் உவமிக்கப்படுகின்றது. இந்த வெட்டுக்கிளிகள் குதிரை போல் காணப்பட்டன. தோற்றத்திலும் செயலிலும் குதிரைகளுக்கு ஒத்திருந்தது. யுத்தம் செய்வதற்கும், சாவதற்கும், எதிர்த்து நிற்பதற்கும் அஞ்சாதிருத்தல் ஆகும். கடைசி காலங்களில் மக்களில் பலர் இந்த வெட்டுக்கிளிகளை போல காணப்படுவர். இரக்கம் இல்லாதவர்களாக, மனசாட்சி இல்லாதவர்களாக, மனிதாபிமானம் இல்லாதவர்களாக, எதையும் பேசவும் செய்யவும் துணிகரம் உள்ளவர்களாக இருப்பர். கடைசி காலங்களில் மனுஷர் எப்படி இருப்பார்கள் என்று 2தீமத்தேயு3:1-9 ல் பவுல் கூறுகின்றார். உடனாளியை நினைவு கூர மாட்டார்கள். உறவுக்காரர்களை நினைத்தே பார்க்க மாட்டார்கள். மூத்தோரை மதிக்கவே மாட்டார்கள். இத்தகைய குணங்கள் இக்காலத்தில் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பதை நாம் காண்கின்றோம். கொரோனா காலத்திற்கு பின்பு மனிதர்கள் மரணம் க...

CCM Tamil Bible Study - வேதனையின் உச்சம்

வெளி 9:5c. அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரை கொட்டும் போது உண்டாகும் வேதனையைப் போல் இருக்கும். எசே2:6;சக14:12;சங்69:20;நீதி23:29;ஏசா26:7;எரே4:19;மத்24:8;மாற்13:8;1தீமோ6:10;1யோவா4:18 வேதனையின் உச்சம்  பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும் என்பது போல ஐந்து மாதங்களும் தொடர் துன்புறுத்தல் தொடரும். கைதியை சிறைக்குள் வைத்து துன்புறுத்துவது போல இந்த வெட்டுக்கிளிகள் மனிதர்களை துன்புறுத்தும். எதற்காக துன்புறுத்துகின்றன என்றோ எப்படி துன்புறுத்துகின்றது என்றோ கொடுக்கப்படவில்லை. புதர்களுக்குள் நடந்தால் எப்பொழுது பூச்சிகள் தீண்டுகிறது என்று தெரியாதது போல இயல்பாகவே எல்லாரையும் இவைகள் துன்புறுத்திக் கொண்டே இருக்கும். வெளியில் நடமாட முடியாதபடிக்கு இவைகளின் நடவடிக்கைகள் காணப்படும். திடீரென்று தாக்குதல், காயம் உண்டாக தாக்குதல் போன்ற வேலை செய்யும். கடைசி காலங்களில் உண்டாகும் வேதனைகளில் இவைகள் முந்தியதாகவுள்ளது.  வேதனை என்பது பாவத்தின் விளைவாகும். வேதனையோடு பிள்ளை பெறுவதும், வலிபட்டு பயிரின் வெள்ளாமையை பெற முயற்சிப்பதும் பாவத்தினால் உண்டான வேதனைகளின் பலனேயாகும். பாவம் இல்லாத காலத்தில் வேதனைப்...