Posts

Showing posts from June, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஏழு கொம்புகள் ஏழு கண்கள்

வெளி 5:6b. அது 7 கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாய் இருந்தது. அந்த கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற ஏழஆவிகளேயாம்.  1சாமு2:10; தானி7:14; மீகா4:13; ஆப3:4; லுக்1:69;பிலி2:9-11; வெளி4:5. ஏழு கொம்புகள் ஏழு கண்கள் அடிக்கப்பட்ட வண்ணமாய் இருக்கிற ஆட்டுக்குட்டியானது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. ரத்தத்தோடு பரலோகத்தில் வரவில்லை. இரத்தம் சிந்தப்பட்ட காயத்தோடு காணப்பட்டது. ஏழு கொம்புகளும் ஆட்டுக்குட்டியின் வல்லமையின் பூரணத்துவத்தை குறிக்கின்றது. எல்லா மனுக்குலத்தையும் அடக்கியாளும் வலிமை கொண்ட மரணத்தினால் கூட இந்த ஆட்டுக்குட்டியை ஜெயிக்க முடியவில்லை. அத்தகைய ஆற்றலும் மகத்துவமும் உடையதாய் இருக்கிறது. மேலும் இந்தக் கொம்புகள் ஆட்டுக்குட்டியின் மகிமை பிரதாபத்தையும் மாட்சிமையும் குறிக்கின்றது. இந்த ஆட்டுக்குட்டியின் மகிமை பிரஸ்தாபத்திற்கு முன்பாக உலகத்தின் எந்த ஜீவனுகளும் நிற்க முடியாது. மேலும் பத்து கொம்புகளோடு ஏறி வரப்போகும் மிருகத்திற்கு சவால் விடுவதாகவும், அதனை ஜெயிக்கிறதாகவும் இருக்கிறது. இந்தக் கொம்புகள் உயர்ந்திருக்கும் கொம்புகளாகும். ஆகையினால் ...

CCM Tamil Bible Study - அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி

வெளி 5:6a. அப்பொழுது இதோ அடிக்கப்பட்டவண்ணமாய் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும் மூப்பர்களுக்கும் மத்தியில் நிற்கக் கண்டேன். வெளி 5:9,12;6:16;7:9-17;12:11;13:8;17:14;21:23;22:1,3; ஏசா53:7,8; யோவான்1:29,36;அப்8:32;1பேது1:19,20. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி என்ற சொல் வெளிப்படுத்தலில் 29 தடவைகள் வந்துள்ளது. அடிக்கப்பட்ட என்ற சொல் வெளிப்படுத்தலில் 8 தடவைகள் வந்துள்ளது. யூதாவின் சிங்கம் என்று சொன்னவர், தாவீதின் வேர் என்று சொன்னவர், இப்போது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று சொல்கிறார். சிங்கம் என்பது ராஜரீக மேன்மையாகிய தேவகுமாரத்துவ ஸ்திதியை குறிக்கின்றது. வேர் என்பது மனுகுலத்தோடு இணைந்தவர் என்று காண்பிக்கும் மனித குமாரன் என்பதை காண்பிக்கின்றது. ஆட்டுக்குட்டி என்பது தேவகுமாரன் மனுக்குலத்தின் மீட்புக்காய் மனிதகுமாரனாக வந்து அடிக்கப்பட்டார் என்று காண்பிக்கின்றது.  இயேசுவை தேவ ஆட்டுக்குட்டி என்றும், மாசற்ற ஆட்டுக்குட்டி என்றும், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்றும் விவிலியம் பெயரிட்டு அழைக்கின்றது. பூலோகத்துக்கு தேவ ஆட்டுக்குட்டியாக வந்தவர் மாசற்ற ...

CCM Tamil Bible Study - ஜெயங்கொண்டிருக்கிறார்

வெளி 5:5d. புத்தகத்தை திறக்கவும் 7 முத்திரைகளை உடைக்கவும் ஜெயம் கொண்டிருக்கிறார். யோவான் 16:33; 1யோவான்4:4;5:4,5; ரோமர் 12:21;3:4; வெளி 2:7,17;3:12,21;2:26;3:5;21:7.  ஜெயங்கொண்டிருக்கிறார் இயேசு கிறிஸ்து தன் பணிகளை முடிக்கும் போது நான் உலகத்தை ஜெயித்தேன் என்று கூறினார். அதே வேளையில் இயேசு சாத்தானை ஜெயித்தார் என்பதை மத் 4 ல் காண்கின்றோம். என்னில் பாவம் உண்டென்று யார் சொல்ல கூடும் என்று கேட்டதனால் பாவத்தையும் ஜெயித்தார் என்று நம்பலாம். வெளிப்படுத்தல் 3 :21ல் நான் ஜெயம் கொண்டேன் என்று சொல்வதினாலும், இந்த ஜெயமே அவரைப் பிதாவின் அருகே உட்கார வைத்தது என்றும் சொல்லி இருப்பதனாலும், உயிர்த்தெழுந்து பரலோகம் ஏறிச்சென்றவர் என்று சுவிசேஷங்கள் கூறுவதனாலும் மரணத்தை ஜெயித்தார் என்று நம்பலாம். ஆக சாத்தான் பாவம் மரணம் ஆகிய மூன்றையும் மேற்கொண்டு உலகத்தையும் மாம்சத்தையும் ஜெயித்தததினால் ஏழு முத்திரைகள் உடைக்க தகுதி உடையவராக இருக்கிறார். தேவனுடைய தீர்மானத்தின்படி 7 முத்திரைகளை உடைக்க தகுதி சாத்தான் பாவம் மரணம் ஆகிய மூன்றையும் ஜெயிப்பதுவேயாகும். உலகமும் மாமிசமும் இந்த மூன்றினாலும் பழுதடைந்து போய் உள்ளத...

CCM Tamil Bible Study - இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

வெளி4:8c. இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.  வெளி3:7;1:8;4:4;யாத்15:11;ஆதி17:1; சங்91:1; ஏசாயா 6:3;13:6; யோவேல்1:15; 2கொரிந்தியர்6:18; எபிரேயர்13:8. பரலோக தேவன் யார்? பரலோகத்தின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் ஏற்கனவே வாழ்கிறவர் இப்பொழுதும் வாழ்கிறவர் இனிமேலும் வாழப் போகிறவர். சர்வவல்லமையுள்ளவர் தேவன் என்றும் கர்த்தர் என்றும் அறியப்படுகின்றவர். பரிசுத்தமுள்ளவர் என்று புகழ்ந்துரைக்கப்படுகின்றார். பூமியில் உள்ளோரும் இவ்வண்ணமாகவே தேவனை குறித்து புகழ்ந்துள்ளனர். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வண்ணமாகவே காட்சியைக் கண்டு பரலோக ஜீவராசிகளின் புகழுரையை கேட்டார். தேவனுடைய ஆவியைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பூமியில் தேவனை இவ்வாறு புகழ்ந்துரைக்க முடியும். பரலோகமும் பூலோகமும் ஒன்று போல் தேவனை புகழ்ந்துரைக்கும் காலமே தேவனின் ராஜாங்கம் வல்லமையாக வெளிப்படும் காலம் ஆகும். இந்த புகழ்ந்துரையில் நான்கு ஜீவன்களும் வெளிப்படுத்துகின்ற சத்தியம் என்ன என்பதை நாம் சுருங்கியவாறு அறிந்துகொள்வது நலமானது. தேவன் ஆதியாய் இருக்கிறவர். இடையில் ...

CCM Tamil Bible Study - கண்ணாடிக் கடல்

கண்ணாடிக் கடல் வெளி 4:6a. அந்த சிங்காசனத்திற்கு முன்பாக பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது. வெளி21:11;22:1;யோபு28:17;எசேக்1:22;வெளி15:2;யாத்38:8;1இரா7:23;எபி9:13,14. ஆசரிப்புக்கூடாரம் மற்றும் தேவாலயத்திற்கு முன்பாக வெண்கல தொட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் தண்ணீர் முழுவதுமாக நிரப்பப்பட்டிருக்கும். கடல் போன்ற தோற்றமுள்ளதினால் வெண்கலகடல் என்றும் அழைப்பதுண்டு. ஆரோனும் அவன் குமாரர்களும் தங்கள் கைகளை கால்களை கழுவுவதற்காகவும், பலிபொருள்களை கழுவுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. பரலோகத்தில் சிங்காசனம் முன்பாக உள்ள கண்னாடிக்கடல் வெண்கல தொட்டியைக் குறிக்குமென்றால் ஆசரிப்புக்கூடாரமும், தேவாலயமும் தேவனுடைய சிங்காசனம் இருக்கும் இடமாகவே அறியப்படும். மேலும் பரலோகத்தில் உள்ள கண்ணாடிக்கடலின் பயன்பாடு குறித்த விஷயங்கள் நமக்கு தரப்பட்வில்லையென்றாலும் இது வெண்கல தொட்டியைக் குறிப்பதாக கருதமுடியாது. இரண்டிற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. கடலில் அமர்ந்துள்ள பாபிலோன் வேசிக்கு எதிரிடையாக தேவன் இந்த காட்சியை யோவானுக்கு வெளிபடுத்துகின்றார். கண்ணாடிக்கடல் என்பது தெளிவான மனோபாவத்தை காண்பிக்கின்றது. தேவன் மு...