Posts

Showing posts from May, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஆவியால் அறியும் அறிவு - Spiritual Knowledge

1Jn3:24b. And by this we know that He abides in us, by the Spirit whom He has given us. 1Jn4:7,12,15,16;Jn6:54-56;17:21;1Cor3:16;6:19;2Cor6:16;2Tim1:14;Gal4:5,6. 1யோவா3:24b. அவர் நம்மில் நிலத்திருக்கிறதை அவர் நமக்கு தந்தருளின ஆவியினாலே அறியலாம். 1யோவா4:7,12,15,16;யோவா6:54-56;17:21;1கொரி3:16;6:19;2கொரி6:16;2தீமோ1:14;கலா4:5,6. ஆவியால் அறியும் அறிவு      ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் நிலைத்திருப்பதற்கு அடிப்படை காரணம் அவரது கட்டளைகளைக் கைக்கொண்டு அவைகளை நினைவகத்தில் கொண்டு வந்து, இருதயத்தில் பதித்து வைத்து அன்றாடம் தியானிப்பதாகும். அவருடைய வசனம் நம்மில் நிலைத்திருப்பதினால் வசனத்தை தருகிறவரும், நினைப்பூட்டுகிறவரும், புரியவைக்கிறவருமாகிய பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் செய்ய வருகிறார். இந்த பரிசுத்த ஆவியானவரே கிறிஸ்து நமக்குள் இருக்கிறார் என்பதை வெளிபடுத்துகிறார். கிரியைகளினாலும், நல்லொழுக்கங்களினாலும், தெய்வீக தன்மைகளினாலும் கிறிஸ்துவை நம்மிலிருந்து உலகிற்கு காண்பிக்கின்றார்.       கிறிஸ்துவானவர் நமக்குள் நிலைத்திருப்பதினால் மட்டுமே நாம் கிறிஸ்துவைப...

CCM Tamil Bible Study - ஆரோக்கியமான உடல் - Message of Derek Prince

Image
(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்) அறிவர் டெரிக் பிரின்ஸின்  செய்தியின் விரிவாக்கம் உடலுக்கு ஆரோக்கியம் நீதிமொழிகள் 4:20-22. பரிசுத்த ஆவியின் முக்கியமானதொரு செயற்பாடு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவனையும், ஆரோக்கியத்தையும் நமது சரீரங்களுக்குக் கொடுப்பதாகும்.  யோவான் 10:10 ல் திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நமக்கு முன்பாக இருவர் இருக்கிறார்கள்: 👎💔ஜீவனை அழிக்கும் சாத்தான் 👍💓ஜீவன் கொடுக்கும் இயேசு கிறிஸ்து நாம் சாத்தானுக்கு இடம் கொடுத்தால் தேவன் நமக்கு அருளின ஆசீர்வாதங்களை திருடி, நம்முடைய சரீரங்களை கொல்லவும், நித்தியமாய் அழிக்கவும் அவன் வருவான்.  ஆகையினால்தான்.. எபேசியர் 4:27 ல் பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். மேலும் மத்தேயு 13:19 .காண்க.  இயேசுவோ நமது செத்துப்போன சரீரத்தை புதுப்பித்து , நமக்கு ஜீவன் தந்து , பரிபூரணப்பட வந்தார்.  இதனை… ரோமர் 8:10,11 ல் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவ...