Posts

Showing posts from February, 2023

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன்

வெளி11:18c. தீர்க்கத்தரிசியாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் பலனளிக்கும் காலம் வந்தது. வெளி22:12;மத்5:12;2தெச1:5-7;எபஇ11:25,26.  ஊழியருக்கு பலன் - பரிசுத்தவான்களுக்கு பலன் பலன் என்ற சொல் புதிய ஏற்பாட்டில் 29 தடவைகள் வந்துள்ளது. செய்த பணிகளுக்கான கூலி, வெகுமதி, சம்பளம் என்று பொருள்படும். இங்கு இரு கூட்டத்தாருக்கான மெய்ப்பலன் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளுக்கும் பரிசுத்தவான்களுக்கும் புதிய மெய் பலன் கொடுக்கப்பட வேண்டிய காலம் வந்தது.  பழைய ஏற்பாட்டில் ஏராளமான தீர்க்கதரிசிகள் பற்பல விதமான குறைவுகளையும், பாடுகளையும், இழப்புகளையும் சந்தித்தனர். தேவன் விரும்புகிறதை தேவன் சொல்லுகிறதை அப்படியே பேசுகிற - செய்கிறவர்களாய் இருந்த தீர்க்கதரிசிகள் தேவனுக்கு அடிமைகளாக ஊழியக்காரர்களாக இருந்து பணி செய்தும் நன்மைகளை பெற்றுக் கொள்ளவில்லை. வேலையாள் கூலிக்கு பாத்திரவானாய் இருந்தும் பலன் பெறாதவர்களாக இவ்வுலகை விட்டுப் போயினர் .அவர்களுக்கு மெய் பலன் - நற்பலன் கொடுக்க வேண்டிய காலம் வந்தது.  இவர்களைப் போல கிறிஸ்துவுக்கு உறுதியாக உண்மையாக விசுவாசத்திலும் சத்தியத...