Posts

Showing posts from May, 2022

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - என்னோடு கூட உட்காருவான்

என்னோடு கூட உட்காருவான் வெளி3:21c. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.  வெளி 1:6;2:26,27;மத்19:28;லூக்22:30;1கொரி6:2,3;2தீமோ2:12. கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்ததுபோல கிறிஸ்துவை முழுமையாக பின்பற்றி வாழ்கிறவர்கள் கிறிஸ்துவின் ஆளுகையில் கிறிஸ்துவோடு கூட உட்கார அருள் செய்யப்படும் என்று கூறுகின்றார்.  சீஷர்களை அனுப்பும் போதும் இதே விதமாய் மத்28:18-20 ல் கூறியுள்ளதை காண்கின்றோம். இக்கூற்றானது சில உண்மைகளை நமக்கு அறிவிக்கின்றது. அவைகளை நாம் தியானிக்கலாம்:-  1. இயேசு கிறிஸ்து தமது இராஜ்யத்தில் ஆளுகை செய்யும் போது சீஷர்களும் கூட உட்காரும்படி ஏற்படுத்தப்படுவதை குறிக்கின்றது. இவர்களோடு 12 கோத்திரபிதாக்களும் சிங்காசனத்தில் உட்காருவர். இந்த ஆட்சியுரிமை இருவிதங்களில் தீர்மானிக்கப்படுகிறதாயிருக்கலாம். ஆயிரம் வருடம் அரசாட்சியில் 12 கோத்திர பிதாக்களும் சிங்காசனங்களில் உட்கார்ந்து உலகை நியாயம் விசாரிக்க கூடும். சீஷர்கள் ஏற்கனவே இயேசுவோடு உட்கார்ந்து பந்தியமர்ந்தனர். புதிய பூமியில் கிறிஸ்துவின் ஆட்சி அமையும்போது 12 ...