Posts

Showing posts from June, 2021

CCM Tamil Bible Study - கோபம்

வெளி12:12d. பிசாசு மிகுந்த கோபம் கொண்டு.நீதி12:16;16:14;27:3,4;பிர7:9;சங்4:4;76:10;தானி11:36;யோனா4:1;மத்2:16;யாக்1:20.  கோபம் கோபம் மிகவும் பொல்லாதது என்று சொல்வது சரியா என்று எனக்கு தெரியவில்லை. தேவன் கோபம் கொள்வது அவசியமானது என்பதை விவிலியத்தில் படிக்கின்றோம். தேவனுடைய விருப்பத்துக்கு மாறாக மனிதர்கள் போனபோது தேவனுடைய கோபம் வெளிப்பட்டது. தேவகோபம் பற்பல விதமான சிதைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது தேவனுடைய நீதியையும் பரிசுத்தத்தையும் வழுவாதன்மையையும் வெளிப்படுத்தியது. தேவனுடைய கோபத்தினால் தண்டனை உண்டாயிற்றென்றால் தேவ இரக்கத்தினால் கிருபையும் மீட்பும் உண்டாயிற்று.  மனிதர்கள் தேவன் மீது கோபம் கொள்வதை விவிலியம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவன் மீதும் தேவ ஆளுகை மீதும் கோபம் காண்பித்தவர்கள் அழிந்து போயினர். ஆகையினால் தான் மனித கோபம் தேவ நீதியை எழுப்பாது என்று அதற்கு முற்றுப்புள்ளி போடப்பட்டது. தேவகோபத்துக்கும் மனித கோபத்துக்கும் உண்டான போட்டிகள் சுருங்கி போயின. ஆனால் தேவ கோபத்திற்கும் சாத்தானின் கோபத்திற்கும் இடையில் உண்டான போட்டிகள் உலகம் அழிக்கப்படுவது வரையிலும் சாத்தான் நரகத்தில் தள்ளப்...

CCM Tamil Bible Study - என் இதயம் யாருக்கு தெரியும்? - Who knows my heart?

(Sunday Sermon - ஞாயிறு பிரசங்கம்)   இருதயத்தை அறிகிறவர் He knows Our heart சங்கீதம் 7:9 -  நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.  சங்கீதம் 139:23 - தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.  நீதிமொழிகள் 24:12 - அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ?.  1தெசலொனிக்கேயர் 2:4 - சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.  【 ஏனெனில் அவரே நம் இருதயத்தை உண்டாக்கினவர்】 சங்கீதம் 33:15 - அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். ஆகவே அவர் நம் இருதயத்தை அறிகிறார்.  அவர் நம் இருதயத்தை எப்படி அறிகிறார்? 1. இருதயத்தை திறந்து அறிகிறார் லூக்கா 24:45 - அப்பொழுது வேத...

CCM Tamil Bible Study - கள்ளதீர்க்கதரிசிகள் - False Prophets

 1Jn4:1a because many false prophets have gone out into the world. 1Jn2:18;Mt24:5,23-26;Mk13:21,22;Lk21:8;Act20:29;1Tim4:1;2Tim3:13;2Pet2:1;2Jn1:7. 1யோவா4:1a. பிரியமானவர்களே உலகத்தில் அநேகம் கள்ள தீர்க்கதரிசிகள் தோன்றியுள்ளார்கள். 1யோவா2:18;மத்24:5,23-26;மாற்13:21,22;லூக்21:8;அப்20:29;1தீமோ4:1;2தீமோ3:13;2பேது2:1;2யோவா1:7. கள்ளதீர்க்கதரிசிகள் உண்டு      தீர்க்கத்ரிசி என்றால் தேவனுக்காக மனிதரிடம் வந்து நிற்கிறவன். தேவனுடைய நீதியை எரியும் தீவட்டியாக மனிதரிடத்தில் சுமந்து வருகிறவன். தேவனுடைய இருதயத்தை மனிதரிடையில் திறந்துக் காண்பிக்கிறவன். தேவனுடைய பரிசுத்தத்தை மனிதரிடையில் பிரகடனபடுத்துகிறவன். முன் நடந்தவைகளையும் பின் நடக்கப் போகிறவைகளையும்சுட்டிகாட்டி நிகழ்காலத்தில் ஜனங்களின் இருதயத்தை தேவனிடமாய் திருப்புகிறவன். தன் தகுதியைக் குறித்தோ, தான் அடையப்போகும் பாடுகளைக் குறித்தோ, தன்னை அவமனபடுத்துகிறது குறித்தோ கவலைப்படாதவன். தன் பணியை முடித்துக்கொண்டு அடையாளம் தெரியாதவனாய் மாறுகிறவன். இத்தியாதி ஏழு குணங்களும் உடைய ஒரு தீர்க்கதரிசி ஜனங்களிடையில் காணப்பட வேண்டும் என்பது தேவன...